Thursday, April 1, 2010

அழகிய திருடா


அந்த உயர்ரக வாட்ச்சுகள் விற்கும் கடையில் கஸ்டமர் போல் போய்த் திருடும் போது கையும் களவுமாய் கபாலி மாட்டிக்கொண்டான்.

திருடியதோ வைரங்கள் பதித்த தங்க வாட்ச்.

விலை ரெண்டு லட்சத்தைத் தாண்டும்.

கபாலியைப் பிடித்த கடை மேனேஜர் போலிசுக்குப் போன் செய்யத் தொடங்கினார்.

அப்போது கபாலி அந்த மேனேஜரைப் பார்த்துக் கேட்டான்.

"இதப் பாருங்க... இப்ப நீங்க போலிசுக்குப் போறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல. வீணா உங்களுக்கும் தொந்தரவு, எனக்கும் தொந்தரவு. ஒண்ணு பண்ணலாம். இந்த வாட்சை நானே வாங்கிக்கறேன். பிரச்சினையை இதோட முடிச்சுக்கலாம். என்ன சொல்லறீங்க..?".

'அதுவும் சரிதான்... இயர் என்டிங்கும் அதுவுமாய் நமக்கும் ஒரு பிஸினஸ் ஆச்சு...' யோசித்த மேனேஜர் ,"ஓகே..!" என்று பில் புக்கை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

மேனேஜர் எழுதுவதை எட்டிப் பார்த்த கபாலி மெல்லக் கேட்டான்.

"இரண்டு லட்சமா...? பட்ஜெட் கொஞ்சம் இடிக்குது.... ஒரு நூத்தைம்பது இருநூறுல எந்த வாட்சும் இல்லியா....?".
.
.
.

1 comment:

Vimal said...

Sooo good

Post a Comment