Friday, April 23, 2010

ஒரு மனோதத்துவ டாக்டர்...



பாபு அன்று ஒரு மனோதத்துவ டாக்டரைச் சந்திக்க வந்திருந்தான்.


"டாக்டர்... எனக்கு ஒரு பிரச்சினை...." என்றவன் தொடர்ந்தான்.

"நான் கட்டிலில் படுக்கும் போதெல்லாம் யாரோ கட்டிலின் கீழே  படுத்திருப்பது போலவே தோன்றுகிறது. தண்டுவடத்தில் பிரச்சினை இருப்பதால் என்னால் கீழே படுக்கவும் முடியாது. இதற்கு நீங்கள்தான் ஏதாவது செய்தாக வேண்டும்...?"

டாக்டர் யோசித்தார்.

"இதைத்தான் கட்டிலோஃபோபியானு சொல்லுவாங்க. ஒரு ரெண்டு வருசம் வாரம் மூணு தடவைனு ட்ரீட்மென்டுக்கு வாங்க.... சரி பண்ணிடலாம்...!"

"ஃபீஸ் டாக்டர்..."

"அது கம்மிதான்... விஸிட்டுக்கு ஐநூறு ரூபாய்...!".

"சரி டாக்டர்..."

போன பாபு வரவேயில்லை.

ஆறு மாதத்துக்கு பிறகு டாக்டர் பாபுவைச் சாலையில் சந்திக்க நேர்ந்த போது கேட்டார்.

"என்ன... அப்புறம் வரவேயில்ல...?"

பாபு கேட்டான்.

"எது... அந்த ஐநூறு ரூபாய் விசிட்டா...? எங்க வீட்டு ஆசாரி வெறும்

ஐம்பது ரூபாயில என் வியாதிய சரி பண்ணிட்டார்..."

டாக்டர் ஆச்சர்யப்பட்டுக் கேட்டார்.

"எப்படி...?"

"ஐம்பது ரூபாயக் கொடுத்ததும் கட்டிலோட நாலு காலையும் வெட்டிட்டார்...!" என்றான்.
.
.
.

No comments:

Post a Comment