அதுவும் பத்து நாள் விடுப்பு கேட்டு விண்ணப்பம் எழுத வேண்டும்.
அவனும் அவன் அப்பாவும்தான் மிக அக்கறையாய் அந்த விடுப்புக் கடிதத்தை தயார் செய்ய முயன்று கொண்டிருந்தார்கள்.
அவனுடைய அப்பா அவனுக்கு மிக உதவுவதாய் நம்ப வைத்து அவனையே எழுத வைத்து விடுவார்.
கேட்டால் அப்போதுதான் அவன் கற்பனைத் திறன் வளரும் என்பார்.
நிறைய நேரம் விவாதித்த பிறகு மகனையே விண்ணப்பக் கடிதத்தை எழுதிவைக்கச் சொல்லிவிட்டு என்னிடம் கண்ணைக் காட்டிவிட்டு வெளியே கிளம்பிவிட்டார் அவர்.
அதற்கப்புறம் கொஞ்ச நேரம் போராடிய பிறகு விடுமுறை விண்ணப்பத்தை ஒரு மாதிரி எழுதி என்னிடம் கொண்டு வந்தான் என் மகன்.
அதை படித்துப் பார்த்தால் ஓரளவு குறைகளற்று ஒரு நல்ல விண்ணப்பக் கடிதத்தையே எழுதியிருந்தான்.
அதுவும் விடுப்புக்குக் காரணம் தலைவலியாம்.
சிரித்துக் கொண்டே படித்துக் கொண்டு வந்த நான் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டதால் அதைச் சரி செய்ய எண்ணி அவனிடம் கூறினேன்.
"எல்லாம் சரி டேனி... இந்த லீவ் லெட்டர்ல விடுமுறைக்கான காரணம் என்கிற இடத்துல சின்ன 'ர' போடணும்... நீ போட்டிருக்கிற பெரிய 'ற' தப்பு...!" என்றேன்.
அதற்கு அவன், "போம்மா... உனக்கு ஒண்ணுமே தெரியல.... அங்க பெரிய 'ற' தான் போடணும். அப்பாதான் பத்து நாள் லீவ் கேக்கணும்ங்கறதால காரணம் பெருசா இருக்கணும்னு சொன்னாங்க...!" என்றான்.
.
.
.
2 comments:
காறணம் - !! :-))))
வேற யோசிக்காம விட்டதுக்கு சந்தோஷப்படுங்க
Post a Comment