Tuesday, April 20, 2010
துறவியும் வாழ்க்கையும்
மணியின் திருமண வாழ்க்கை அவ்வளவு இன்பமானதாய் இல்லை.
எந்நேரமும் மனைவியுடன் சண்டையும் சச்சரவும்.
வாழ்க்கையே வெறுத்துப் போய் ஒரு துறவியிடம் வந்தான்.
துறவி சொன்னார்.
"நீ உனது மனைவி சொல்வதைக் கவனிக்கக் கற்றுக்கொள்...!".
மணி துறவி சொன்னதை மனதில் ஏற்றுக் கொண்டு அப்படியே செய்ய ஆரம்பித்தான்.
வாழ்க்கை முன்னிலும் இனிதாய் மாறிப் போனாலும் மணிக்கு இன்னும் ஏதோ குறை.
ஒரு மாதம் கழித்து துறவியிடம் சென்றான்.
"அய்யா... நீங்கள் சொன்னபடி இப்போதெல்லாம் என் மனைவியின் ஒவ்வொரு வார்த்தையையும் இதயபூர்வமாக கவனிக்கிறேன். அதற்குப் பின் என்ன தேவையோ அதையும் செய்கிறேன். என் வாழ்க்கை மாறிவிட்டது. இப்போது மிக இன்பமாய்ப் போகிறது...!".
துறவி சிரித்தபடியே சொன்னார்.
" நீ இனி வீட்டுக்குப் போனதும் மனைவியின் வார்த்தைகளை மட்டுமல்ல... அவளுடைய மௌனத்தையும் கவனிக்கக் கற்றுக் கொள். வாழ்க்கை இன்னும் இன்பமாய் மாறிவிடும்...!".
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒவ்வொரு கதைகளும் மிக அருமையாக உள்ளது பத்மினி..... ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்துவிட்டேன்.... ஆனால் கமெண்ட் போடத்தான் நேரம் இல்லை :)) அதனால் மொத்தமாக இங்கயே சொல்லிவிட்டேன் ... :) முக்கியமான விஷயம் என்னவென்றால்.... ஒரு சில கதைகளை என்னுடைய பேஸ்புக்கில் பதித்துள்ளேன்.... அதற்கு பயங்கரமான வரவேற்பு :)) ( பயபடாதீங்க உங்க பெயரைத்தான் போட்டிருக்கேன் )
தங்கள் பணிதொடர வாழ்துக்கள்.
என்றும் அன்புடன்.
மக்கள் கவிஞர். சுட்டபழம்.
Post a Comment