Friday, April 2, 2010

குடிகாரக் குப்பன்


சியர்ஸ் பார் பொள்ளாச்சியின் குடிகாரர்களின் பாரடைஸ்.

மங்கிய அரை இருட்டில் தட்டு நிறைய தீவனங்களை வைத்துக் கொண்டு மேல சிகரெட் பிடித்தவாறு தண்ணி அடிப்பது ஒரு சுகம்.

அன்று அந்த டேபிளில் குடித்துக் கொண்டிருந்தவர் அடிக்கடி டேபிள் மேல் கவிழ்வதும் , சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து விட்ட இடத்தில் இருந்து குடிப்பதுமாக தொடர்ந்து கொண்டே இருந்தவர்... கடைசியில் கவிழ்ந்தே விட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பார் அட்டெண்டர் அங்கே வேலை செய்யும் மற்றொருவனைப் பார்த்துச் சொன்னான்.

"இங்க பாரு... அந்த எட்டாம் நம்பர் டேபிள் ஆள் ஒண்ணும் வீடு போய் சேர முடியாது. ஆள் வேற புதுசாத் தெரியுது. கொஞ்சம் எழுப்பித் தெளிய வச்சு... வீடு எங்கனு கேட்டு கொண்டுபோய் விட்டுட்டு வந்துடு...!".

அவனும் அந்த நபரைத் தூக்கி தோளில் தாங்கியபடி நடத்திக் கொண்டு போனான்.

டேபிளிலிருந்து கதவுக்குப் போவதற்குள்ளேயே பத்துப் பன்னிரெண்டு தடவை தடுமாறி விழத் தெரிந்தார்.

மெல்ல கதவைத் திறந்து அவருடைய காரைக் கண்டுபிடித்து கூடவே ஓட்டிக்கொண்டும் வந்தாயிற்று.

அந்த குடிகாரர் வீட்டைக் காட்டியதும் காரை நிறுத்தி மெல்ல இறக்கி வீட்டின் கதவருகே கொண்டு சென்றான்.

கதவைத் திறந்த அந்தக் குடிகாரனின் மனைவி அந்த ஆளைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்த மனுஷன்கூட டெய்லி இதே வேலையாப் போச்சு. ஆமா... இவரோட வீல் சேர் எங்கே...?".

.
.
.

No comments:

Post a Comment