Wednesday, April 21, 2010

சிறுகச் சிறுகச் சேர்த்து...


என் மகன் டேனிக்கு இது பத்தாவது பிறந்தநாள்.

டேனியின் இந்தப் பிறந்தநாளுக்கு உபயோகமாய் ஏதாவது கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.

"டேனி... இந்த வருஷம் உன் பிறந்த நாளுக்கு உன் பெயரில் ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாமா...?".

டேனியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

"என் பெயரிலா... எனக்கே எனக்கான அக்கவுண்டா...?".

"ஆமாம்...!" என்ற நான் அவனை அழைத்துக் கொண்டு பேங்கிற்குப் போனேன்.

உள்ளே சென்று புது அக்கவுண்டிற்கான அப்ளிகேஷனை வாங்கி அவன் கையில் கொடுத்து, "இந்தா... இந்த அப்ளிகேஷனை நீயே ஃபில் பண்ணு..." என்றேன்.

மெல்ல ஒவ்வொன்றாய்ப் படித்துப் படித்து மிகச் சரியாய் எழுதிக் கொண்டே வந்தவன் - 'நீங்கள் முன்பு சேமிப்புக் கணக்கு வைத்திருந்த இடத்தின் பெயர்...' என்று பேங்கின் பெயர் கேட்டிருந்தது.

அந்த இடத்தில் கொஞ்ச நேரம் யோசித்த என் மகன் டேனி...

...பின்பு கீழ்க் கண்டவாறு எழுதினான்.

"உண்டியல்"
.
.
.

No comments:

Post a Comment