Tuesday, April 13, 2010

தில்லுதுர அட் ரெசார்ட்




தில்லுதுர தன்னுடைய விடுமுறையைக் கழிக்க ஒரு மலை வாசஸ்தலத்தில் இருந்த நேரம்.

ஒரு நள்ளிரவு தாண்டிய பின்னிரவு. யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டுத் திறந்தால் கதவுக்கு வெளியே யாரையும் காணோம். ஆனால் சத்தம் மட்டும் கேட்டது.

"ஐயா... எம் பேரு ஜான்... வெளியே ரொம்பக் குளிரா இருக்கு. இன்னைக்கு ஒரு நைட் இங்கே தங்கிக்கட்டுமா..?".

'யாராய் இருக்கும்...?'... என்ற குழப்பத்துடன் உற்றுப் பார்த்தபோது இருட்டில் காலடியில் ஒரு நத்தை நிற்பது தெரிந்தது.

தில்லுதுர ராத்தூக்கம் கெட்ட கோபத்தில்,"ஒழிஞ்சு போ..!" என்று எட்டி உதைக்க... அதைச் சற்றும் எதிர்பாராத அந்த நத்தை சற்று தூரம் பறந்து மலையின் கீழே  இருட்டில் விழுந்துபோனது.

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்கும்.

தில்லுதுர அடுத்த விடுமுறைக்கு அவனுடைய ஃபேவரைட் இடமான அதே இடத்தில் அதே அறையில் தங்க...

அதே இரவு நேரத்தில்...

அதே போல் கதவு தட்டப்பட்டது.

மிகுந்த கோபத்துடன் கதவைத் திறந்தான் தில்லுதுர.

வெளியே பார்த்தால் அதே நத்தை.

அது கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தது.

தில்லுதுர எரிச்சலுடன்,"என்ன...?" என்று கேட்டதும் நத்தை அவனைப் பார்த்துக் கேட்டது.

"ஏன் அப்படி செஞ்ச...?".
.
.
.

1 comment:

Post a Comment