Thursday, April 15, 2010

டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்...


அது ஒரு சாயங்கால டீ வேளை.
என் மகன் டேனியும் கணவரும் விளையாண்டு கொண்டிருக்கும்போது டீயும் கேக்கும் கொண்டு போனேன்.
அசந்தர்ப்பமாக அன்று இரண்டு துண்டுக் கேக்குகள்தான் இருந்தது.
நாங்களோ மூன்றுபேர்.
டேனிதான் கேட்டான்.
"அம்மா... ரெண்டு கேக்குதான் இருக்கு... நம்ம மூணு பேரு இருக்கமே...!".
நான் பதில் சொல்வதற்குள் என் கணவர் உள்ளே நுழைந்தார்.
"டேனி...அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணி கேக் ரெண்டையும் மூணா மாத்தட்டுமா..?".
மேஜிக் என்றதும் என் மகனின் கண்கள் விரிந்தன.
"ஹை...மேஜிக்... எங்கே பண்ணுங்க பாக்கலாம்...?".
என் கணவர் மேஜிக் எதுவும் பண்ணுவதாய் தெரியவில்லை.
மாறாக கணக்கில் தனது புலமையைக் காட்டினார்.
"டேனி... இது எத்தனை..?" என்றார் முதல் துண்டைக் காட்டி.
என் மகன்,"ஒண்ணு...!' என்றான்.
அவர் அடுத்ததைக் காட்டி, "இது எத்தனை..?" என்றார்.
"இரண்டு...!" என்றான் டேனி.
என் கணவர்,"ஒண்ணும் ரெண்டும் எத்தனை...?" என்றார்.
"மூணு..."என்ற என் மகன் டக்கென்று இரண்டு துண்டு கேக்கையும் எடுத்துக் கொண்டு சொன்னான்.
"அம்மா... இந்தா முதல் பீஸை நீ எடுத்துக்க... ரெண்டாவதை நான் எடுத்துக்கறேன். அப்பா... மேஜிக் பண்ணி வந்த அந்த மூணாவது பீஸை எடுத்துக்கட்டும்...!".
.
.
.

1 comment:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

இது தேவையா ?குழந்தைகளிடம் அவ்வப்பொழுது இப்படித்தான் மாட்டிக்கொண்டு திருதிருவென விழிக்க நேரிடும்:))

Post a Comment