Monday, February 15, 2010

தமிழன் என்று சொல்லடா...


ஒரு பஞ்சாபி, ஒரு மலையாளி, ஒரு தமிழன் மூவரும் ஒரு மோசமான சாலை விபத்து ஒன்றில் மாட்டி உயிரிழந்து விட்டனர்.

மூவரின் உடலும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் மூவரின் உடலையும் பரிசோதித்த பிறகு அவர்கள் உடலை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்ல டாக்டர் முடிவெடுத்தபோது அந்தப் பஞ்சாபி திடீரெனக் கண் விழித்தான்.

எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்துவிட்டனர்.

பிறகு ஒரு டாக்டர் கேட்டார், "என்னப்பா...என்ன நடந்தது...?".

பஞ்சாபி பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... டமால்னு ஒரு சத்தம். அதுக்கப்புறம் பளீர்னு ஒரு வெளிச்சம். கண் முழிச்சுப் பாத்தா... சித்திரகுப்தன் முன்னால நிக்கிறோம். அவர்தான் கேட்டாரு -'பாத்தா சின்ன வயசா இருக்கீங்க... வாழவேண்டிய வயசு... ஆளுக்கொரு ஒரு லட்சம் நன்கொடையா கொடுத்தீங்கனா திரும்ப பூமிக்கே அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்றீங்க..?' - நான் யோசிக்கவே இல்ல. டப்புனு என் சூட்கேஸத் தொறந்தேன். ஒரு லட்ச ரூபாய எடுத்து வெச்சேன். இதோ இப்ப இங்க இருக்கேன்...".


டாக்டருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.


அவர் கேடடார், "உன் கதை ஓகே... மத்த ரெண்டு பேரு... அவங்க ஏன் இன்னும் திரும்பி வரல்ல...?".


பஞ்சாபி பதில் சொன்னான்.


"நான் கடைசியாப் பாக்கும் போது அந்த மலையாளி டொனேஷன் ஜாஸ்தினு கம்மி பண்ண பேரம் பேசிக்கிட்டு இருந்தான். அந்தத் தமிழ் ஆளு எப்படியும் அவன் கவர்மென்ட்டுக்குத் தெரிஞ்சு அவங்க பே பண்ணி அவனை பூமிக்குக் கூட்டிக்கிட்டு வந்திடும்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தான்...!"


2 comments:

உமா கிருஷ்ணமூர்த்தி said...

வெகு யதார்த்தமாக சிரிப்புக்குள் சிந்தனை ஒளிந்து சுரீர் எனப் புரிய வைக்கப் பட்டிருக்கின்றது ரசித்தேன் :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வரவேற்கின்றேன் மின்மினி தேசத்தை அருமையான என்ட்ரி :)

Post a Comment