Tuesday, February 2, 2010

பரிசு - இரண்டரைக் கோடி கார்

டேனி என்னும் அந்தச் சிறுவன் கார் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த விலையுயர்ந்த காரையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த அந்த காரின் ஓனர் இளைய யுவன் டேனியிடம் கேட்டான். "ஒரு ரவுண்ட் போலாம்... வர்றியா?"டேனி ஆர்வமாய் தலையசைத்தான்.
அந்த யுவன் அவனைக் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்ட் போனான். "பாத்தியா... டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், பக்கா ஆடியோ ஸிஸ்டம், செவன் கியர், பவர் ஸ்டியரிங், பூராவும் ஆட்டோமேட்டிக்... ஆஸ்த்திரேலியவுல செய்தது. என் அண்ணன் என்னோட பர்த்டேக்கு பரிசா கொடுத்தான். இரண்டரைக் கோடி விலை.........."
அவன் பேசிக் கொண்டே போக டேனி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.அந்த யுவன் சிரித்தான். "இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு தெரியும்......."
டேனி நிமிர்ந்து பார்த்தான்.
அந்த யுவன் தொடர்ந்தான். "என் அண்ணன் மாதிரி ஒரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும்னுதான் நினைக்கிறே..?"
டேனி சிரித்தவாறே பதில் அளித்தான்."இல்ல... நான் உன் அண்ணன் மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...." என்றான்.

3 comments:

Unknown said...

Nice One Meens...All the Best.

manjoorraja said...

அன்பு நண்பரே,
நண்பர் சென்ஷியின் மூலம் உங்களின் கதைகள் பலவற்றை இன்று பண்புடன் கூகிள் குழுமத்தில் படித்தேன். ஒரு சில நல்லா இருக்கு, சில சுமார், ஒன்றிரண்டு சூப்பர்.

தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்.

Anonymous said...

nalla sindhanai

Post a Comment