Tuesday, October 5, 2010

முத்தம்

அன்று என் வீட்டில் ஒரு கெட்-டுகெதர் அரேன்ஞ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தேன்.

அதன் பொருட்டு வீட்டிற்கு உடன் பணிபுரியும் தோழிகள் சிலரை வரச் சொல்லியிருந்தேன்.

நானும் என் கணவரும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, பார்ட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பு... கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு அப்படியே அழுக்காய் வந்து நின்றான் என் நான்கு வயது மகன் டேனி.

நான் அவனைப் பார்த்து,"டேனிக்குட்டி ஓடு... ஓடிபோய் முகத்தைப் பளிச்சுனு கழுவிட்டு வந்து நில்லு பார்ப்போம்...!".

டேனி உடனே மறுப்பாய்த் தலையை ஆட்டினான்.

"முடியாது... முகத்தைக் கழுவ மாட்டேன் போ...!".

சிலசமயங்களில், அவன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால்.. அவனை தாஜா செய்ய ஆரம்பித்தேன்.

"டேனி குட் பாய்தானே...? யாராவது டேனியப் பார்த்து 'அழுக்குப் பையன்'னு சொல்லலாமா...? இப்ப நீ போட்டிருக்கற ட்ரஸ் சூப்பரா இருக்கு. போய் முகத்தை மட்டும் நல்லா சோப்புப் போட்டு கழுவிட்டு வருவியாம். அப்பத்தான் பார்ட்டிக்கு வர்ற அம்மாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் 'யாரிந்த அழகான குட்டிப் பையன்'னு தூக்கி கன்னத்துல முத்தம் கொடுப்பாங்களாம்...?".

நான் செல்லமாய் அவனிடம் பேசப் பேச... லேசாய் மனம் மாறியவன் முகம் கழுவ ஒத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்.

பார்ட்டிக்கான டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும்போது திருத்தமாய் ட்ரஸ் பண்ணிக்கொண்டு வேகவேகமாய் ஹாலுக்கு திரும்ப ஓடி வந்தவன், சிரித்தபடியே என்னிடம் சொன்னான்.

"அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க...!".
.
.
.

11 comments:

எல் கே said...

hahahah super

சென்ஷி said...

ஹாஹாஹா... புத்திசாலிப்பையன் :)))

சி.பி.செந்தில்குமார் said...

ada.இவ்வளவுதானா?நல்ல டெக்னிக்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

யாருப்பா பாத் ரூம்லேயிருந்து சொப்ப எடுத்தது...

ரமேஷ் கார்த்திகேயன் said...

//அம்மா... அப்பாவும் முகம் கழுவிக்கிட்டு இருக்காங்க..//

ஹாஹாஹா...

தமிழ் அமுதன் said...

;;))

Unknown said...

ha ha ha.....

jeganjeeva said...

ஹா ஹா ஹா சூப்பர் ஜோக்கு. :))))

@raguc said...

உங்க பதிவ அலுவலகத்தில் படிச்சா நம்மள அரை கிறுக்கன்னு சொல்லிருவாங்க, சிரிப்பு சிரிப்பா வருது!

நான் மதன் said...

சொந்த அனுபவமா. நல்லாருக்கு

Saravana kumar said...

super maamu

Post a Comment