மதுரை மாநாட்டில் அம்மா சொன்ன குட்டிக் கதை இது.
ஒரு புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் இருந்தார்.
அவர் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஒரு பாலத்தைக் கட்டினார்.
அந்தப் பாலத்தின் தன்மை மற்றும் உறுதி பற்றிக் கூறும்போது அவர் சொன்னார்.
"இந்தப் பாலம் முப்பது டன் எடை வரை தாங்கக்கூடியது. ஆனால், அதற்குமேல் ஒரு குண்டூசி வெயிட் அதிகமானால்கூட பாலம் உடைந்து நொறுங்கிவிடும்...!" என்றாராம்.
அதையும் செக் செய்துவிடலாம் என்று, மொத்த எடையுடன் தனது எடையும் சேர்த்து சரியாய் முப்பது டன் எடையுடன் ஒரு லாரி பாலத்தின் மீது அனுப்பப்பட்டது.
லாரி கிளம்பி கிட்டத்தட்ட நடுப்பாலம் வரை வந்துவிட்டது.
அப்போதுதான், அந்த விபரீதம் நடந்தது.
எங்கிருந்தோ பறந்து வந்த நான்கு புறாக்கள் லாரியின் மீது சாவகாசமாய் வந்து அமர்ந்தன.
எல்லோரும், பாலம் எப்போது உடையுமோ என்று திக் திக்கென்று பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திற்கு எந்த ஒரு சேதமும் இல்லாமல்... லாரி பாலத்தின் மறுபக்கம் வந்து சேர்ந்தது.
எல்லோரும் அந்த பொறியாளரைப் பார்த்து,"என்ன உங்க கணக்கு தப்பாகிவிட்டதே..?" என்று கேட்க, அந்த பொறியாளர் சொன்னார்.
"என் கணக்கு எப்போதும் தப்பாகாது. லாரி பாலத்தின் இந்த முனையிலிருந்து கிளம்பி நடுவே வருவதற்கு ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அவ்வளவு தூரம் வருவதற்கு செலவான டீசலின் எடையைவிட புறாக்களின் எடை குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான், பாலம் உடையவில்லை..!" என்று விளக்கம் கொடுத்துவிட்டு தனது மாணவர்களுடன் நடந்து போனாராம்.
.
.
.
6 comments:
ஆஹா அருமை
சூப்பர் ........... எந்த புண்ணியவான் எழதி கொடுத்தானோ ...
நல்லாத்தானே இருக்கு கதை
லேபிள்: திருடன் - ஏன்?
சூப்பர்.. என்னமா சமாளிக்கறாங்கையா..
எதற்காக இந்த கதையை சொன்னார் அம்மா?!
கதை நன்றாகவே இருக்கிறது.
அட அட அடா!!
Post a Comment