ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் தன நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மிகவும் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலைச் சந்திக்க வெகு தொலைவிலிருந்து வந்திருந்தார்.
அண்ணலைப் பார்த்து தான் கொண்டு வந்திருந்த திராட்சைப் பழத்தை அவரிடம் கொடுத்தார் அந்தப் பெண்மணி.
சிரித்துக் கொண்டே அதில் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்ட அண்ணல் அவர்கள், பிறகு யாருக்கும் கொடுக்காமல் அந்தப் பெண்மணியின் கண் முன்னாலேயே அவர் கொடுத்த பழம் முழுவதையும் சாப்பிட்டு விட்டார்.
அந்தப் பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுவிட்டார்.
அவர் சென்றபின் நண்பர்கள் அண்ணலிடம் கேட்டனர்.
''அண்ணலே... இது என்ன புதுப் பழக்கம்?. வழக்கமாக யார், எது கொண்டு வந்தாலும் எல்லோருக்கும் கொடுத்துத்தானே சாப்பிடுவீர்கள்... ஆனால், இன்று பழம் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே, பழம் மிக ருசியாய் இருந்ததோ..?''
புன்னகையுடன் அண்ணல் சொன்னார்.
''அந்தப் பெண்மணி கொடுத்த பழத்தில் ஒன்றை வாயில் போட்டேன். அது மிகவும் புளிப்பாக இருந்தது. உங்களிடம் கொடுத்தால் புளிப்பாயிருக்கிறது என்று யாராவது இயல்பாய் சொல்லியிருப்பீர்கள். அதைக்கேட்டு அந்த பெண்ணின் மனம் மிகவும் வருத்தமாகி இருக்கும். அதனால்தான் சிரித்துக் கொண்டே, நானே முழுவதையும் சாப்பிட்டு விட்டேன். அந்த பெண்ணின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் பார்த்தீர்களா..?.
.
.
4 comments:
great person
அடடா, திராட்சை (வடை) போச்சே. :-)
எங்கள் கண்மணி நாயகத்தின் புகழ் பாடிய
அருமை மின்மினி, தங்களுக்கு நன்றிகள் பல கோடி.
Rasool sallallahu Alaihivasallam is always great:):):):)
சந்தோஷத்தில் பெரிய சந்தோசம் பிறரை மகிழ்வடையச் செய்து பார்ப்பது என்பார்கள்.அவர் அதைத்தான் செய்திருக்கின்றார்
Post a Comment