சமீபத்தில் ஏதோ விளையாட்டு விழா முடிவு நாள் நிகழ்ச்சி நடந்திருக்கிறது நம் ஊரில்.
அதற்கு, நமது அண்டை நாட்டு அதிபர் வந்திருக்கிறார்.
நம் மக்களை கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்ததில் பெயர் போனவர் அந்த அதிபர்.
ஆனால், அவர் வந்ததோ நம் நாட்டுடனான நட்பு ரீதியில்.
அவருக்கு வரவேற்று மரியாதை செலுத்தும் முறையில் நமது 24 பீரங்கிகள் முழங்கின.
அவற்றின் முழக்கம் ஓய்ந்த பிறகு அந்த சுட்டவர்களில் ஒருவரை நெருங்கிக் காரணம் கேட்டிருக்கிறான் நம்ம காத்தமுத்து.
அந்த வீரன், காத்தமுத்துவிடம் 'இன்னார் வந்திருக்கார்.. அதனால சுட்டோம்'னு காரணம் சொன்னார்.
அதுக்கப்புறம் காத்தமுத்து ரொம்ப ஆர்வமாய் அவரிடம் கேட்டான்.
"இப்ப அவர் எங்கே.. பார்க்கமுடியுமா.?"
அதற்கு அந்த வீரர்,"அவர் இப்பத்தானே காரில் ஏறிப் போனார்..!".
வீரர் சொன்ன பதிலைக் கேட்ட காத்தமுத்து வருத்தத்தோட இப்படிச் சொன்னான்.
"இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!".
.
.
.
5 comments:
இத்தனை தடவை சுட்டும் உங்க குறி தப்பிடுச்சேப்பா...!
:(
நல்ல கதை!
நல்லாயிருக்கே...கதை.
காத்தமுத்துக்கு சொல்லுங்க “கரும்புலிகளின் சாப்பாட்டை நாம சுட்டு பாழ்படுத்தக்கூடாதுன்னு”!
எவ்வளவோ பேரை அஸாஸினேட் பண்ணறாங்க - இவனை விட்டுட்டாங்களே - உங்க ஆற்றாமை புரியுது - நல்ல பதிவு - நன்றி - @ஸ்வீட்சுதா1
Post a Comment