விமலாவும் வேதிகாவும் அந்தக் கம்பெனியில் ஒரே நாளில்தான் இன்டர்வியூவுக்கு வந்தார்கள்.
இருவருமே நல்ல அழகிகள்.
அந்தக் கம்பெனியில் சேர்வதற்கு அழகும் ஒரு முக்கியமான விஷயமாய் இருந்ததால், வந்திருந்த எத்தனையோ பேர்களில் அவர்கள் இருவர் மட்டுமே, அந்தக் கம்பெனியின் இளைய முதலாளியால் அங்கே வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
விமலா கடின உழைப்பாளி. அவள் கடினமாக உழைத்தாள். வேலையில் மிகுந்த கவனம் செலுத்தினாள். எந்த வேலையைத் தொட்டாலும் வெற்றிகரமாய் முடித்தாள். வெகு சீக்கிரமாய், அவள் வேலை செய்த பிரிவின் தலைவியாகப் பதவி உயர்வு பெற்றாள்.
ஆனால் வேதிகாவோ... வேலையே செய்யவில்லை. தான் அழகாய் இருப்பதிலேயே கவனம் செலுத்தினாள். பியூட்டி பார்லரே கதி என்று கிடந்தாள். உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்துக் கொள்வதும், உடைகளை விலையுயர்ந்ததாய் உடுத்துவதுமே அவள் குறியாய் இருந்தது.
அவள், வெகுவிரைவில் அந்தக் கம்பெனி இளைய முதலாளியை கல்யாணம் செய்து கொண்டு முதலாளியம்மா ஆகிவிட்டாள்.
.
.
.
8 comments:
:)))
சிறப்பான நீதி!
பிழைக்கும் வழியை வேதிகா தெரிந்து வைத்திருக்கிறாள்.
ஆகவே சதா பிசினஸ் பிசினஸ் என்று இருக்கும் இளைய முதலாளியிடம் அதிக நேரம் செலவளிக்கும் பாக்கியம் உழைப்பாளி விமலாவுக்கே கிடைத்தது. :-)
நல்ல கருத்து சொல்லல் திறமை அழகு இரண்டும் பெண்களுக்கு மிக முக்கியம்
vedhika polakira jaadhi pola...
//ஆகவே சதா பிசினஸ் பிசினஸ் என்று இருக்கும் இளைய முதலாளியிடம் அதிக நேரம் செலவளிக்கும் பாக்கியம் உழைப்பாளி விமலாவுக்கே கிடைத்தது. :-)//
அது! :)
அப்படியே வேதிகாவுக்கும் ஒரு உழைப்பாளி அழகன் துணையா அமையமாட்டானா? :))
ஹா ஹா! சரிதான்.
நல்லா சொன்னிங்க நீதி
Post a Comment