மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள்.
வழியில் சிற்றுண்டி தாயாரிக்கும் பாட்டியிடம் டிபன் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க, மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, "எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி?" எனக் கேட்டாள்.
மூவரும் பரிட்சை எழுத போவதைப் பற்றிக் கூறினார்கள்.
அதற்கு பாட்டி, "நீங்க ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா இந்தத் தம்பி கண்டிப்பா பாஸ் ஆயிடும்..." எனக் கூறினாள்.
பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அனால், ரிசல்ட் என்னவோ பாட்டி சொன்னபடித்தான் இருந்தது..
இருவரும் அந்த பாட்டியிடம் சென்று "எப்படி பாட்டி ரிஸல்ட்டைக் கரெக்ட்டா சொன்னீங்க..? உங்களுக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா...?" என்று கேட்டதற்கு பாட்டி சொன்னாள்.
"எனக்கு ஜோசியமெல்லாம் தெரியாதப்பா... ஆனால், ஒண்ணு தெரியும். வேகாத வடை சத்தம் போட்டுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடும்... வெந்த வடையோ அமைதியா ஒரே எடத்துல இருக்கும்...!".
.
.
.
5 comments:
செம தத்துவங்க .!!
அட! வித்தியாசமான கருத்துள்ள கதை! வாழ்த்துக்கள்!
வடை சுவைதான்.
ஆனால் வடைக்குள் பல நகைச்சுவைகளும்,சுவையான கருத்துக்களும் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.
அருமை
aaha :))
Post a Comment