தில்லுதுர அன்று தீபாவளி பர்ச்சேஸ் முடிக்க தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு வந்திருந்தார்.
தீபாவளிப் பர்ச்சேஸை ஆடித் தள்ளுபடியிலேயே முடித்துவிடுவது அவர் ஸ்டைல்.
மனைவியைப் பெரும்பாலும் வெளியே அழைத்து வருவதும் அப்போதுதான்.
மனைவிக்கோ அவருடன் பர்ச்சேஸ் செய்வதென்பது மரண அவஸ்தை.
ப்ளாட்பார்ம் கடைகளில் கிடைக்காததை, அல்லது மனைவி குழந்தைகள் வாங்க மறுத்து வம்பு செய்தால் மட்டுமே கடைக்குள் நுழைவது அவர் பாலிஸி.
அதனால்தான், இன்று குழந்தைகளை ஸ்பெஷல் க்ளாஸ் அனுப்பிவிட்டு மனைவியை மட்டும் அழைத்துக்க் கொண்டு ரங்கனாதன் தெருவுக்கு வந்திருந்தார்.
காசு கொடுத்து எதையும் வாங்குவதென்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.
வந்தவர் பர்ச்சேஸ் செய்த கதை சொல்ல கம்பனால்கூட முடியாது என்பதால் கடைசிச் சாப்டரை மட்டும் சொல்கிறேன் நான்.
பர்ச்சேஸ் முடித்துவிட்டு பஸ் ஸ்டான்ட் அருகில் வந்த அவர் மனைவி கேட்டதற்காக, அவளை முறைத்துக்கொண்டே காப்பிக் கடைக்குள் அழைத்துச் சென்றார்.
ரெண்டு காப்பி சொல்லிவிட்டு வந்ததும்...
அந்தக் காப்பியை ஆற்றக்கூட ஆற்றாமல் கொள்ளிவாய்ப் பிசாசு போல அப்படியே சுடசுடக் குடித்தார்.
அதைப் பார்த்துத் திகைப்படைந்து மனைவி கேட்டார்.
"என்னங்க... இவ்ளோ சூடாக் குடிக்கறீங்க...?".
தில்லுதுர அப்போதும் பதட்டத்துடன் சொன்னார்.
"அடியே... நீயும் சீக்கிரம் அந்தக் காபியை குடிச்சுடுடி. அங்கே போர்ட்ல என்ன போட்டிருக்கான் பாரு.. ஹாட் காஃபி 10 ரூபாய்... கோல்ட் காஃபி 25 ரூபாய் ...!".
.
.
6 comments:
ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா.. கடவுளே.. கடவுளே.. தில்லு துரையை ஏன் இம்புட்டு புத்திசாலியாப் படைச்சே? :)))
//காசு கொடுத்து எதையும் வாங்குவதென்பது அவருக்குப் பிடிக்காத ஒன்று.//
அட பாவமே , உண்மைலேயே அவரு தில்லு துறைதான் ..!!
செம காமெடி .. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ..!!
ஹாஹ்ஹ்ஹாஹ்ஹா
:)
நல்ல காமெடி.
Post a Comment