Tuesday, July 6, 2010

தில்லுதுர அட் மைக்ரோசாப்ட்


தில்லுதுர படிச்சு முடிச்சுட்டு ரொம்பநாளு வேலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்த காலம் அது.

யாரு கேடடாலும், 'என் தகுதிக்கு ஏத்த வேலையா தேடிக்கிட்டு இருக்கேன்...' என்பார்.

அதையும் தாண்டி யாராவது நோண்டி நோண்டி விசாரிச்சா, 'நானெல்லாம் என் தகுதிக்கு அமெரிக்காவுல இருக்க வேண்டியவன்...' என்று ஆரம்பித்துவிடுவார்.

எல்லோரும் 'இவன் கெட்ட கேட்டுக்கு அமெரிக்காவாம்...!'னுட்டு போயிடுவாங்க.

ஆனாப்பாருங்க... ஒருநாளு அவரு சொன்ன மாதிரியே மைக்ரோசாப்ட்லருந்து இன்டர்வ்யூ வந்துடுச்சு.

தில்லுதுர ஒரே சந்தோஷமாயிட்டாரு.

அன்னிக்கு காலைல எழுந்திருச்சு, குளிச்சு,பாடி ஸ்பிரேயெல்லாம் அடிச்சு, பக்காவா ட்ரெஸ்ஸெல்லாம் பண்ணிக்கிட்டு மைக்ரோசாப்ட் ஆபீஸ் வாசலுக்குப் போயிட்டார்.

ரிஷப்ஷன்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணச் சொன்னாங்க.

தில்லுதுர காத்திருந்தார்.

பத்து நிமிஷம் கழிந்தது.

தில்லுதுரக்கு அழைப்பு வந்துவிட்டது.

தில்லுதுர உள்ளே நுழைந்ததும் அவருடைய ஃபைலை கொஞ்ச நேரம் புரட்டிவிட்டு, அவருடைய குடுமபம், வசதி, முன் அனுபவம் எல்லாவற்றையும் பார்த்த ஹெச்.ஆர். அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"மிஸ்டர். தில்லுதுர... இப்ப உங்களுக்கு வேலை கொடுக்க கம்பெனி தயார்னு வெச்சுக்கங்க... உங்களுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிபார்ட்மென்ட்ல வேலை பாக்கணும்னு ஆவல் இருக்கா...?"

தில்லுதுர அசராமல் பதில் சொன்னார்.

"எஸ் சார்... உங்க கம்பெனில சி.இ.ஓ. இல்லைனா ஜெனரல் மேனேஜரா மேனேஜ்மென்ட்ல இருக்க ஆசைப்படறேன்...!".

தில்லுதுரயின் பதிலைக் கேட்டு அரண்டுபோன ஹெச்.ஆர். கேட்டார்.

"ஏய் மிஸ்டர்... உனக்கு பைத்தியம் ஏதாவது புடிச்சிருக்கா...?".

அதைக் கேட்ட தில்லுதுர கூலாய் அவரைப் பார்த்துக் கேட்டார்.

"ஏன் சார்... அதுதான் அந்தப் போஸ்ட்டுக்கான தகுதியா...?".
.
.
.
நன்றி: அஷீதா.கே

9 comments:

கௌதமன் said...

தில்லு துர பற்றி கட்டுரை எழுதி தில்லு தொரசானி அம்மா போடோ போட்டிருக்கீங்களே!

அஷீதா said...

கலக்குறீங்க போங்க :)))
சூப்பரூ...

ப்ரியமுடன் வசந்த் said...

:)

எல் கே said...

:))))

ப்ரியமுடன் வசந்த் said...

ஹா ஹா ஹா சூப்பர்ப்..

Aba said...

பில் கேட்ஸ் மட்டும் இதப் படிக்கணும்...

ஜூப்பரு...

Unknown said...

@கவுதமன்: எந்த ஊர்ல தொரசாணி அம்மா நின்னுகிட்டு....?

சுட்டபழம் said...

:)) நாந்தான் சுடுறேன்னா எல்லோருமே ஆரம்பிச்சாச்சா :))

வெங்கட்ராமன் said...

தனது திறமையை குறைத்து மதிப்பிடக்கூடாது தான், அதற்காக இந்த அளவிற்கு உயர்த்தியும் மதிப்பிடக்கூடாது. கதை அருமை.
தங்களது தளத்தில், கதைகள் அனைத்தும் அருமை, எப்படி ரூம் போட்டு யோசிப்பீர்களோ!.

Post a Comment