குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
அதுசமயம் பக்தன் ஒருவன் அவரைக் காண வந்தான்.
அவர் அமர்ந்திருந்த இடம் ஆற்றங்கரையின் அருகிலிருந்த மிக உயரமான பாறையாயிருந்தது.
அந்தப் பாறையின் கீழே அந்த ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.
வந்த பக்தன் அவர் காலடியில் இரண்டு வைரக் கற்களை வைத்து வணங்கினான்.
அவன் வாழ்நாளெல்லாம் அலைந்து சேர்த்த செல்வம் அது.
குரு கண்விழிக்கும்வரை அங்கேயே அமைதியாக காத்து நின்றிருந்தான்.
மெல்லக் கண் விழித்த குரு அவனைப் பார்த்தார்.
அவன் தன் காலடியில் வைத்திருந்த வைரக் கற்களையும் பார்த்தார்.
அவர் அதில் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அது கை நழுவி ஆற்றின் மையத்தில் போய் விழுந்தது..
பதறிப்போன பக்தன் ஓடிச் சென்று நதியில் குதித்தான்.
இங்கும் அங்கும் மூழ்கி மூழ்கி அதைத் தேடினான்.
நெடுநேரம் தேடிப் போராடிக் களைத்துபோய் மேலேறி வந்தவன், கண்மூடித் தியானத்திலிருந்த குருவை எழுப்பி,"வைரம் எந்த இடத்தில் விழுந்தது என்று சரியாகச் சொல்ல முடியுமா...?" என்று கேட்டான்.
குரு மற்றொரு வைரத்தை எடுத்து நடு ஆற்றில் எறிந்துவிட்டு,"அதோ அங்கேதான்...!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
.
.
.
4 comments:
அழகு :)
சில நிமிடங்கள் கழிச்சு குருவோட பிரதான சிஷ்யன் வந்து,
"குருவே, விஷயம் கேள்விப்பட்டேன். இப்படி பண்ணிட்டீங்களே?உங்க பிரதான சிஷ்யை சஞ்சிதாவுக்கு வைர நகைன்னா ரொம்ப பிடிக்குமே" என்றார்.
"உஷ்... தொந்தரவு பண்ணாத,அப்பறம் போட்ட எடம் மறந்துரும்.அவன் போயிட்டானா பாரு."
அறிவிலி சொன்ன கொசுறு கதையை மெயின் கதையோடு இணைத்தால் கச்சிதமான சிறுகதை.
உண்மை...!
Post a Comment