Wednesday, May 5, 2010
கோபம்... கொலைவெறி...
பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.
“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.
“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”
“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.
“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
நன்றாக இருக்கிறது. படித்துச் சிரித்தேன். நன்றி.
:)))))
75க்கு வாழ்த்துக்கள் :)
எக்ஸலண்ட் :)
i just read this in the office and not able to control my laughing. May be my boss will get "kolaiveri" on me
நண்பர் சென்ஷி மூலமாக இங்கு வந்தேன். மகிழ்ந்தேன்.
பாராட்டுகள்.
நல்ல இளைப்பாறல் அளிக்கும் பதிவுகள். நன்றி
அருமையா இருந்தது. பாராட்டுகள்.
ஓ.. பின்னூட்டப் பெட்டி திறந்தாச்சா? மிக்க நன்றி!.. ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. எல்லாம் அழகான முத்துக்கள்.. தொடருங்கள்!
அசத்தல்... சிரிச்ச சிரிப்பில் என் பையன் பயந்துட்டான்.. :)
நன்றாக இருந்தது, வயிறு குலுங்க சிரித்தேன்...
வாழ்த்துகள் 75 ம் பதிவிற்கு
நன்றி எங்களது கருத்துரை சொல்ல வசதி செய்ததற்கு...
தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும் :-)
எல்லோருடைய அன்புக்கும் நன்றி...!
ஏன் இந்த கொலை வெறி..
ஹாஹாஹா.. எப்படிங்க இப்படி?
உங்க எல்லா பதிவையும் படிச்சிருக்கேன்.. எல்லாமே அருமை.. பின்னூட்டம் போட முடியலயேன்னு ஒரு வருத்தம் இருந்தது.. இப்போ ஒகே..
நன்றி அனு.
நன்றி பிரேமா மகள்.
மிக நன்றி எல்லோருக்கும்....!
நண்பர் சென்ஷி மூலமாக இங்கு வந்தேன். மகிழ்ந்தேன்.
பாராட்டுகள். :-)
சிரிக்க வைக்கும் இடுகை. அருமை.
:)))
good one iam enjoying vermuch
புதிய தலைமுறையில படிச்சுட்டுத்தாங்க இங்க வந்தேன்...வாழ்த்துக்கள்...
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் அருகில் கொலை வெறியுடன் பார்க்கிறார்கள்
இன்றுதான் உங்கள் வலைப்பூவின் அறிமுகம் கிடைத்தது. படித்த முதல் பதிவே அசத்தலாய் கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாய் சொல்லிய பதிவாய் அமைந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்.
Saami Mudiayala!!!
கொலைவெறி...கொலைவெறி...கொலைவெறி... கொலைவெறி...கொலைவெறி...கொலைவெறி...
சிரிச்சு முடியலை! ஆபீஸ்ன்னு பார்க்காம சிரிச்சுப்புட்டேன்! எல்லாரும் ஒரு மாதிரியா பார்க்குராங்க! :D
Post a Comment