Friday, May 28, 2010
பாசக்கார பயபுள்ள...
டேனி மாடியிலிருந்து இறங்கும்போதே பயங்கரமாய் அழுதுகொண்டே வந்தான்.
நான் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன்.
வேகமாய் அவனருகே சென்று, "என்ன டேனி... என்ன ஆச்சு...?"
அவன் அழுதுகொண்டே,"அம்மா.. அம்மா... அப்பா மாடியில சுவத்துல ஃபோட்டோக்கு ஆணி அடிக்கும்போது நழுவி சுத்தியல் அப்பா கையிலயே பலமாப் பட்டுடுச்சு...!"
நான் இவனுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் சற்று ஆசுவாசமானேன்.
அவனோ இன்னும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான்.
இவன் தான் எவ்வளவு நல்லவன்.
அப்பா மேல்தான் பையனுக்கு எவ்வளவு பாசம்.
நான் அவனைச் சமாதானப்படுத்த எண்ணி மெல்ல அவனுடன் பேச ஆரம்பித்தேன்.
"இதப் பாரு டேனி... இது ஒரு சின்ன விஷயம்... இதுக்குப் போயி நீ இவ்வளவு அழுக வேண்டியதில்லை... நீ நிறைய வளர்ந்து இப்ப பெரிய பையனா ஆயாச்சு... இதுக்கெல்லாம் போயி அழுகக்கூடாது... இன்னும் சொல்லப்போனா நீ இதுக்கு சிரிக்கக்கூடச் செய்யலாம்...!"
அழுது கொண்டிருந்த டேனி சட்டென்று நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.
"போம்மா... அப்பா கையில சுத்தியல் பட்டதும் நான் முதல்ல சிரிக்கத்தான் செஞ்சேன்...!".
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
// அப்பா கையில சுத்தியல் பட்டதும்
நான் முதல்ல சிரிக்கத்தான் செஞ்சேன்...!". //
ஹும்ம்.. என்ன பண்ண..?
எல்லா பாசக்கார பயபுள்ளங்களும்
இப்படி தான் இருக்காணுக..
இவங்களுக்கு அப்பாவா பொறந்தது
நம்ம தப்பு..
:))
பையன் பேரும் பையனும் என் மகன் டேனி போலவே..
நல்லாருக்கு குட்டிகதை..
//. இன்னும் சொல்லப்போனா நீ இதுக்கு சிரிக்கக்கூடச் செய்யலாம்...!"//
enna villangam
//"போம்மா... அப்பா கையில சுத்தியல் பட்டதும் நான் முதல்ல சிரிக்கத்தான் செஞ்சேன்..//
ammavuku ettha payyan
எது எப்படி இருந்தாலும் குழந்தைகள் உலகில் இருப்பது மிகச் சுகமானது தானே...?
குழந்தைகளின் கதை, தன் குழந்தையை நினைவுபடுத்துதலே ஒரு சுகம் என்றால்... குழந்தையின் பெயரும் ஒன்றாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அதிகமாய் சுகத்தைக் கொடுக்கவே செய்கிறது அல்லவா..?
எல்லோருக்கும் எனது அன்பு.
nalla kadhai ... nalla irukku ...
Aiyo! Aiyo
kids express their emotions so naturally - cute one : )) @sweetsudha1
ஹி ஹி அடி பலமோ??
Post a Comment