Saturday, May 29, 2010

அற்புதர்



துறவி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார்.

ஊர் மக்கள் எல்லோரும் அவரைத் தரிசிக்க வந்த போது அதில் ஒருவர் துறவியின் சீடரைப் பார்த்துக் கேட்டார்.

"அவ்வளவு பெரியவரா இந்தத் துறவி...?"

அதற்குச் சீடர் சொன்னார்.

"மகான் இவர். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிகப் பெரிய அற்புதங்களைச் செய்ய வல்லவர் இப்பெரியவர்...!".

வந்தவரோ இன்னும் சந்தேகம் தெளியாமல் கேட்டார்.

"அப்படியெதுவும் அற்புதங்களை இவர் செய்ததாய் நாங்கள் கேட்டதில்லையே..."

அதற்கும் சீடர் எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்.

"மாமனிதர் இவர்... இவர் எப்படி அற்புதங்களைச் செய்ய வல்லவரோ... அதேபோல் அற்புதங்களைச் செய்யாமல் இருப்பதிலும் வல்லவர்...!".

அற்பர்கள் வியப்பதற்காக அற்புதங்களைச் செய்வதில்லை அற்புதர்கள்.
.
.
.

1 comment:

சென்ஷி said...

//அற்பர்கள் வியப்பதற்காக அற்புதங்களைச் செய்வதில்லை அற்புதர்கள்./

சரியான கருத்துதான்..

Post a Comment