Wednesday, May 26, 2010

சுகமான சுமைகள்



துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார்.

செங்குத்தான மலை. எனவே, மேலே ஏறஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு.

சற்று தூரம் இன்னும் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாய்ப் பாடல் ஒன்றும் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.

துறவிக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்.

அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னம்மா... இவ்வளவு சிறிய பையைத் தூக்கி கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே... உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது...?"

அதற்கு அந்தச் சிறுமி பதில் சொன்னாள்.

"அய்யா... நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை...!"

துறவிக்குப் புரிந்தது...

'அன்பு எதையும் சுமக்கும்...!'.
.
.
.

11 comments:

Robin said...

//அன்பு எதையும் சுமக்கும்...!'// True!

மங்களூர் சிவா said...

wow!
nice

ராஜா சந்திரசேகர் said...

ஆமாம்.அன்புக்கு எதுவும் சுமையில்லை.
http://raajaachandrasekar.blogspot.com/

சென்ஷி said...

அருமை..

வெங்கட் said...

" அன்பு எதையும் சுமக்கும்...!"
உண்மை தான்..

இந்த போட்டோ எங்கே பிடிச்சீங்க..
கூகுல்லயா..?
ரொம்ப பொருத்தமா இருக்கு..

இப்படி Comment-ஐ கேட்டுகிட்டு
சும்மா இருந்தா எப்படி..?
ஏதாவது சொல்லணுமில்ல..

" வாங்க சார்.. நீங்க Comment
போட்டதுக்கு அப்புறம் தான்
நம்ம Blog-க்கு ஒரு அழகே வந்து
இருக்கு.. இப்படி. அப்படி எதாவது
சொன்னா Interesting-ஆ இருக்கும்ல.."

மறுபடியும் வந்து பார்ப்போம்.
என்ன பதில் போட்டு இருக்கீங்கன்னு.

பத்மினி said...

நெஜம்மாவே நீங்கள் கமெண்ட் போட்ட பின்னாலதான் நம்ம பிளாக்குக்குக்கே ஒரு அழகு வந்து இருக்கு வெங்கட்.
உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் எனது அன்புகள்.
நன்றி...!

Ravi G. said...

Very nice story illustrating an oft-overlooked truth!

வெங்கட் said...

@ பத்மினி.,

என் வார்த்தைக்கு மதிப்பு
கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.,

உங்க Blog ரொம்ப நாளா
நான் படிச்சிட்டுதான் இருக்கேன்..
அப்பல்லாம் Comment-ஐ நீங்க
On பண்ணலை..

அதான் இப்ப பண்ணிட்டீங்களே..
Reply-யும் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க..
இனிமே ஜமாய்சிடலாம்..

Venkat M said...

Touching story.... Keep it up.

Sujai said...

என்ன மீன்ஸ் சார்.... இப்படி செண்டிமெண்டா அடிசிடீங்க...
பருவல சார், இப்பிடி காமெடி செண்டிமெண்ட் nu மிக்ஸ் பண்ணி அடிங்க.. உங்க blog ku இன்னும் அழகு சேர்க்கிறது :-)

-Sujai

உமா கிருஷ்ணமூர்த்தி said...

'அன்பு எதையும் சுமக்கும்...!'.//


மிக மிக அருமை ...சுகம் ஒரு பொழுதும் சுமையாகாது சுமை ஒரு பொழுதும் சுகமாகாது

Post a Comment