Friday, May 21, 2010

டேனியின் கணக்கு




சில சமயங்களில் நாம் நினைப்பதைவிடச் சுலபமான வழிகள் எல்லாவற்றுக்கும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு நாள் அவனுடைய அப்பா ஷூ போடும் போது அவனுக்குக் கொடுத்த அட்வைஸை அவன் அப்படியே கணக்குப் பாடத்திற்குச் சொல்லியிருந்தான்.

இன்று கணக்குப் பாடத்திற்கு அவன் கொடுத்த அட்வைஸ் மட்டும் வொர்க் அவுட் ஆயிருந்தால் ராமானுஜமோ வேறு யாருமோ நமக்குத் தேவை இருந்திருக்காது.

நாமும் கணிதத்தால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டோம்.

அவன் கணக்குப் பாடத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பானோ தெரியாது.

அவன் கணக்கு நோட்டை ஒரு நாள் யதார்த்தமாய் பிரித்துப் பார்த்த போது அவன் அதில் கணக்குப் பாடத்திற்கு மிகப் பெரிய மனிதன் போல் ஒரு அறிவுரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.

அது தமிழில்...

"டியர் மேத்ஸ்...
நீ இன்னும் வளர்ந்து உன்னுடைய பிராப்ளங்களை நீயே சால்வ் செய்து கொள்ள வேண்டும். வேறு யாராவது வந்து சால்வ் செய்யும் வரை வெய்ட் பண்ணக் கூடாது...! ஓகே...?".
.
.
.

2 comments:

எல் கே said...

:)

சென்ஷி said...

//
"டியர் மேத்ஸ்...
நீ இன்னும் வளர்ந்து உன்னுடைய பிராப்ளங்களை நீயே சால்வ் செய்து கொள்ள வேண்டும். வேறு யாராவது வந்து சால்வ் செய்யும் வரை வெய்ட் பண்ணக் கூடாது...! ஓகே...?".//

தத்துவ முத்துக்கள் :)) மிக மிக அருமை..

Post a Comment