Wednesday, May 12, 2010

ஒரு தச்சனும் அவனுடைய பல்பும்



தனது மனோதத்துவ மருத்துவமனையில் எப்போதும் போல் மார்னிங் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார் டாக்டர் லாடு லபக்குதாஸ்.

அப்போது அவரது நோயாளிகளில் ஒருவன் தரையில் அமர்ந்து மரத்துண்டு ஒன்றை பாதியாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

ஆனால், மற்றொரு நோயாளியோ உத்திரத்தின் உச்சியில் ஒரு கயிறைக் காலில் கட்டிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தான்.

நம்ம லபக்குதாஸ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் முதல் நோயாளியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னப்பா பண்ணிட்டிருக்க..?".

அவன் தனது வேலையிலிருந்து கொஞ்சமும் தனது கவனத்தைத் திருப்பாமல் பதில் சொன்னான்.

"பாத்தா தெரீல... நான் கட்டையை செதுக்கிட்டு இருக்கேன்...!".

லபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைக் காட்டிக் கேட்டார்.

"அதோ... அவன் என்னப்பா பண்ணிட்டிருக்கான்...?".

அதற்கு முதலாமவன் பதில் சொன்னான்.

"அவனா... அவன் நம்ம பிரண்டுதான். ஆனா... கொஞ்சம் காமெடியானவன். அவனே அவனை ஒரு லைட்டு பல்புனு நெனச்சுக்கிட்டு மேலே போய் தொங்கிக்கிட்டு இருக்கான்...!"

லபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.

ரொம்ப நேரமாய்த் தொங்கிக் கொண்டிருந்திருப்பான் போல. முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து மிகச் சிவந்து கிடந்தது.

லபக்குதாஸ் கலவரத்துடன் அந்த முதலாமவனிடம் கேட்டார்.

"அவன் உன் பிரண்டுன்னா... அவனுக்கு ஏதாவது நடக்கறதுக்குள்ள அவனைக் கொஞ்சம் கீழே வரச் சொல்லலாமில்ல...?".

லபக்குதாஸ் சொன்னதும் முதலாமவன் கோபமாய்க் கேட்டான்.

"என்னது...? அவனைக் கீழே இறக்கிவிட்டுட்டு நான் எப்படி இருட்டுல வேலை செய்யறது...?".
.
.
.

9 comments:

சென்ஷி said...

suuuper :))

Anonymous said...

அட்டகாசம்! நன்று! நன்று!

Thomas Ruban said...

ஹி,ஹி,ஹி,ஹி....

Aba said...

என்னாலே முடியலே...

sriram said...

ஹி,ஹி,ஹி,ஹி.... முடியலே

மங்களூர் சிவா said...

ஹா ஹா
:))

பத்மினி said...

எல்லோருடைய அன்புக்கும் நன்றி.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

ஹா ஹா நம்மை விட அப்னார்மலில் இருப்பவர்கள் நன்றாக யோசிக்கிறார்கள் சில நேரம்

நடராஜன் said...

I was alone in a room waiting for my colleagues to join me! Read this post!! Laughing alone in a room!! Aiyo the next patient would be me

Post a Comment