தில்லுதுர ஒருசமயம் பிசினஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தார்.
ஊருக்குத் திரும்ப வந்தபோது, எல்லோரும் அவருடைய கேவலமான நீளமான தாடியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
நண்பர்களோ அவரது தாடி குறித்து அவரிடமே கிண்டல் செய்தனர்.
"என்ன தில்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான தாடி..?".
பதிலுக்கு தில்லுதுர அதைவிடக் கேவலமாய் தாடியைப் பற்றி பதில் சொன்னார்.
அதைக்கேட்ட அவரது நண்பர்கள் மிக ஆச்சர்யமாய் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்கள்.
"பிடிக்கலைனா எதுக்கு தில்லு வளர்க்கிற..?".
தில்லுதுர அவர்களிடம் கூலாய் பதில் சொன்னார்.
"பிடிக்கலை... ஆனாலும் வளர்க்கணும்...!".
நண்பர்கள் திரும்பவும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.
"பிடிக்காததை ஏன் வளர்க்கிற.. எடுத்துட வேண்டியதுதான..?"
தில்லுதுர முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பதில் சொன்னார்.
"எடுத்திடலாம்னுதான் இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது... என் மனைவிக்கும் இந்த தாடி பிடிக்கலைனு...!".
.
.
.
4 comments:
வளத்துற வேண்டியதுதான்....
சூப்பருங்க, குடும்பம் வெளங்கிரும் :-)
இறுதி வரியில் நகைச்சுவை கசிகிறது அருமை . பகிர்வுக்கு நன்றி
asdf
Post a Comment