Wednesday, December 29, 2010

கொடி அசைந்ததால்

இரண்டு ஜென் துறவிகள் கோவில் வாசலில் நின்றிருந்தார்கள்.

இருவரும் மேலே கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் சொன்னார், "கொடி அசைகிறது..!"

"இல்லை..." என்றார் அடுத்தவர். "காற்றுதான் அசைகிறது..!"

"ம்ஹூம், தப்பு...!" என்றார் முதல் துறவி. "காற்று எங்கேயும்தான் இருக்கிறது. ஆனால் கொடி இங்கே மட்டும்தானே அசைகிறது..?".

"காற்று மட்டும் இல்லாவிட்டால் கொடியால் எப்படி அசையமுடியும்..?" என்றார் இரண்டாவது துறவி.

இவர்கள் இப்படி மாறி மாறிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக அவர்களுடைய குருநாதர் வந்தார்.

"உங்களுக்குள் என்ன சண்டை..?".

துறவிகள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, தங்களுடைய பிரச்னையைச் சொன்னார்கள்.

"நீங்களே சொல்லுங்கள் குருவே. இங்கே கொடி அசைகிறதா, அல்லது காற்று அசைகிறதா..?".

சொல்லிவிட்டு இருவரும் குருவின் முகத்தையே ஆர்வமாய்ப் பார்க்க, குரு சொன்னார்

"இரண்டுமே இல்லை. உங்களுடைய மனம்தான் அசைகிறது...!".

சொல்லிவிட்டு குரு போக, துறவிகள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
.
.
.

2 comments:

gopinath said...

மிக மிக அருமை. ஒரு கமெண்ட் கூட இதற்கு இல்லாததுதான் வருத்தம். நீங்கள் சிரிப்பு கதைகளாய் கொடுத்தால் கமெண்ட்ஸ் கொட்டும். ஆனால் இதற்கு? உங்கள் அனைத்து பக்கங்களையும் இன்றுதான் ஒரே மூச்சில் படித்தேன்.

gopinath said...

மிக மிக அருமை. ஒரு கமெண்ட் கூட இதற்கு இல்லாததுதான் வருத்தம். நீங்கள் சிரிப்பு கதைகளாய் கொடுத்தால் கமெண்ட்ஸ் கொட்டும். ஆனால் இதற்கு? உங்கள் அனைத்து பக்கங்களையும் இன்றுதான் ஒரே மூச்சில் படித்தேன்.

Post a Comment