Wednesday, August 4, 2010

மனைவியைக் காணோம்

தில்லுதுர ஒரு பொருட்காட்சியில் தன் மனைவியைத் தொலைத்துவிட்டார்.
பொருட்காட்சியிலோ கட்டுக்கடங்காத கூட்டம்.
எங்கே எதைத் தேடிக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை... அவளும் போன் செய்யவில்லை; தில்லுதுர போன் செய்தாலும் எடுக்கவில்லை.
தில்லுதுரக்கு கோபமான கோபம்.
கூட்டம், புழுக்கம்,தூசி,சப்தம் என இத்தனைக்கும் நடுவே மனைவியைத் தேடிச் சுற்றிச் சுற்றி டயர்டாகிப் போனார் அவர்.
சரி, ஒரு ஜூஸாவது குடிக்கலாம் என்று பொருட்காட்சியிலேயே ஜூஸ் கடையில் போய், "ஒரு ப்ளெய்ன் சாத்துக்குடி..." என்று சொல்லிவிட்டு கண்களைக் கூட்டத்தில் அலையவிட்டார்.
ம்ஹூம்... மனைவி கண்ணில் மாட்டவேயில்லை.
ஜூஸ் வந்து சாப்பிடும்போதுதான் தில்லுதுர தன் எதிரே நிற்கும் அவனைக் கவனித்தார்.
நல்ல அழகான இளைஞன்.
பார்க்க ஒரு சினிமா நடிகன் போலிருந்தான்.
உடையிலும் அணிந்திருக்கும் கண்ணாடி ஷூ போன்றவற்றிலும் அவன் பணக்காரத்தனம் தெரிந்தது.
கையில் செல்போனை வைத்துக் கொண்டு பரபரவென யாருக்கோ ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.
தில்லுதுர தன் கவலை மறந்து, கொஞ்சம் ஆர்வமாய் அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் போனில் ட்ரை செய்வதும் கொஞ்ச நேரம் கூட்டத்தில் தேடுவதுமாய் இருந்த அவனிடம் தில்லுதுர கேட்டார்.
"என்ன பிரதர்... என்ன பிராப்ளம்...?".
அவனும் தில்லுதுர போலவே கூட்டத்தில் தன் மனைவியைத் தொலைத்துவிட்டுத் தேடும் தனது சோகத்தைச் சொன்னான்.
"போனைக் கூட எடுக்கமாட்டேங்கறா சார்...!".
தில்லுதுர அலுப்புடன் பதில் சொன்னார்.
"எல்லாப் பொண்ணுகளும் அப்படித்தாம்பா... எம் பொண்டாட்டியையும் நான் உன்னை மாதிரித்தான் தேடிக்கிட்டு இருக்கேன். சரி, ஒண்ணு பண்ணுவோம். நாம ரெண்டு பேரும் ஒண்ணாச் சேர்ந்து தேடுவோம். என் வொய்ஃபப் பாத்தா நீ சொல்லு... உன் வொய்ஃபப் பாத்தா நான் சொல்லறேன்... என்ன...?".
அவனும் ஒத்துக்கொண்டான்.
"சரி... உன் வொய்ஃப் எப்படி இருப்பா? அடையாளம் சொல்லு...!".
அவன் சொல்ல ஆரம்பித்தான்.
"சார், அவ பேரு ஜெஸிந்தா. இருபத்திரெண்டு வயசு. ரொம்ப அழகா இருப்பா...!".
தில்லுதுர ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்டார்.
"இப்பிடிச் சொன்னா எப்பிடிப்பா.... ஏதாவது குறிப்பான அடையாளம் இருந்தாச் சொல்லு...!"
அவன் தொடர்ந்தான்.
"சார்... ஜெஸி உயரமும் கிடையாது, குள்ளமும் கிடையாது... அளவான உயரம். அதுக்குத் தகுந்த உடம்பு. உதட்டுக்கு மேல ஒரு சின்ன மச்சம் இருக்கும். நல்ல வட்டமான முகத்துல ஒரு சின்ன ஸ்டிக்கர்ப் பொட்டு. நல்லா லூஸ் ஹேர் விட்டிருந்தா. அப்புறம் ட்ரெஸ் வந்து முக்காக்காலுக்கு தொடையைக் கவ்வுன மாதிரி ஸ்கைப்ளூ கலர்ல ஸ்ட்ரெட்ச் பேன்டும்... மேல வொயிட் கலர்ல ஒரு ட்ரான்ஸ்பரென்ட் சர்ட்டும் போட்டிருந்தா...!".
என்றவன் நிமிர்ந்து தில்லுதுரயப் பார்த்துக் கேட்டான்.
"சார்... நீங்க உங்க வொய்ஃப் அடையாளம் ஒண்ணும் சொல்லலியே...!".
கேட்டதுதான் தாமதம் சட்டென்று பதிலளித்தார்.
"அவ கெடக்கிறா விடுங்க.... மொதல்ல உங்க வொய்ஃப்பத் தேடுவோம்...!".

9 comments:

senthil velayuthan said...

நல்ல தமாஷு ..ரசித்தேன் நன்றி

அநாமதேயன் said...

கேட்டதுதான் தாமதம் தில்லுதுர சட்டென்று பதிலளித்தார்.

“ஓ.. அதானா உங்க ஒய்ஃப்.. நான் அவங்களை ஜொள்ளு விட்டுட்டு இருக்கும்போதுதான் என் ஒய்ஃப் தொலைஞ்சு போனா..” என்றாரே பார்க்கலாம்.

Anonymous said...

very nice :)

இளைய கவி said...

சூப்பரு

Rekha raghavan said...

கடைசி வரி "நச்'.

ரேகா ராகவன்.

இந்திரன் said...

அண்ணே ... செம .. செம ... சொந்த அனுபவமா???

chinnapiyan said...

தில்லுதுரைனா தில்லுதுரைதான். அருமையான புனைவு. வாழ்க வளர்க

Unknown said...

Superrrrrrrrrrrrrrrrrrrrrr................

TG said...

சார் சிரிக்காமல் இருக்க முடியல

Post a Comment