பெட்ரோல் விலையை மறுபடியும் உயர்த்தியாகிவிட்டது.
லிட்டர் இப்போது எண்பது ரூபாய்.
நாட்டின் தலைவர்கள் எப்போதும்போல் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிறார்கள்.
பக்கத்து நாட்டைவிட விலை கம்மி என்கிறார்கள்.
இதன் மூலமாக விலைவாசி மறைமுகமாக ஏறுவதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.
மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
ஆளும்கட்சி இதைச் சப்பைக்கட்டு கட்டுகிறது.
எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் பண்ணுகிறது.
மக்கள் தலைவன் ஒருவன் ஒருநாள் பந்த்துக்கு அறைகூவல் விடுத்தான்.
ஏமாந்த மக்கள் அவன் பின்னால் ஒன்று திரண்டனர்.
அவன் சொன்னான்.
"மக்களே... நாம் யாரென இந்த அரசுக்குப் புரிய வைப்போம். நமது எதிர்ப்பை மௌனமாய்ப் புரிய வைப்போம். நாளை ஒரு நாள் நமது அடையாள எதிர்ப்பைக் காண்பிப்போம். நாளை யாரும் சொந்த வாகனங்களை ஓட்டக்கூடாது. பிற வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்கக் கூடாது. இது எதிர்ப்பு மட்டுமல்ல. ஒருநாள் நமது உலகம் மாசற்று இருக்கட்டும்...!"
மக்கள் ஒப்புக்கொண்டார்கள்.
காலையிலிருந்து யாரும் வாகனங்களை எடுக்காமலும் மற்ற வாகனங்களை ஓட விடாமலும் பார்த்துக் கொண்டாரகள்.
மறுநாள், சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி சப்தமில்லாமல் இருக்கும் போது தில்லுதுர தனது ஓட்டை பைக்கை டபடப என்று ஒரு முக்கிய சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தான்.
சாலையில் கவனித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவனது வண்டியைச் சூழ்ந்து கொண்டனர்.
"இன்னிக்கு யாரும் வண்டியை ஓட்டக் கூடாது எனச் சொல்லியிருக்கே... தெரியாதா..?".
தில்லுதுர கேட்டான்,"எதுக்கு...?".
கூட்டத்தில் ஒருவன் கோபமாய்ப் பதில் சொன்னான்.
"பெட்ரோல் விலை ஏற்றம் எல்லோரையும் பாதிக்குதே... அதை எதிர்த்துத்தான்...!".
தில்லுதுர கொஞ்சமும் கோபமின்றி அவர்களிடம் பதில் சொன்னான்.
"ஓகே, பெட்ரோல் விலையேற்றம் உங்களை பாதிக்குது... நீங்க ஸ்ட்ரைக் பண்ணறீங்க. என்னை அது பாதிக்கலியே... நான் ஏன் இதுல கலந்துக்கணும்...?".
வண்டியை மறித்தவர்கள் மிரண்டு போனார்கள்.
"என்னய்யா சொல்லுற... பெட்ரோல் விலையேற்றத்தால நாடே கதிகலங்கிக் கிடக்குது. இருபது ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்ப எண்பது ரூபாய்க்கு விக்குது. உன்னைப் பாதிக்கலைனு அலட்டிக்காமச் சொல்லுற.,எப்படி...?".
அவர்கள் கேட்டு முடித்ததும் தில்லுதுர அவர்களிடம் சொன்னான்.
"பெட்ரோல், அப்ப இருபது ரூபாய்க்கு விற்ற போதும் சரி... இப்ப எண்பது ரூபாய்க்கு விற்கும் போதும் சரி... நான் ஐம்பது ரூபாய்க்குத்தான பெட்ரோல் போடுவேன். அப்புறம் எப்படி என்னை விலையேற்றம் பாதிக்கும்...?".
.
.
.
12 comments:
நானும் கூட தில்லுதுர டைப்புல டெர்ரா திங்க் பண்றவன் தான் :)))))))))))
Good One...!
Nice
நானும் தில்லுதுர தான்....
அவரா நீங்க!? கலக்கல்!!
ஹா.. ஹா.. ஹா...
செம்ம சூப்பர் பதிலு :))))
பெரும்பாண்மை மக்கள் இப்படித்தான். மேலும் எது நடந்தால் நமக்கென்ன, இப்படியும் சிலர்.
Chance-e illa... keep it up
அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
முடிலீங்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஹா ஹா... :) நல்லா இருக்கு
ஆஹா...
Post a Comment