Tuesday, May 28, 2013

டேனியும் சிகரெட்டும்



என் எதிர் வீட்டில் குடியிருக்கும் என்ஜினியர் பையன் ஒரு செய்ன் ஸ்மோக்கர்.

அந்தப் பையன் எப்போது சிகரெட் பிடிக்கும் போது பார்த்தாலும் டேனி, "அங்கிள்... சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜூரியஸ் ட்டூ ஹெல்த்.!" என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

ஆனால் அந்தப் பையனும் சிரித்துக் கொண்டே, "விட்டுடறண்டா தம்பி..." என்று கன்னத்தை தட்டிவிட்டுச் செல்வான்.

ஆனால் விட்டபாடுதான் இல்லை.

அன்று காலையிலும் அப்படித்தான்... கடைக்குப் போய் வரும்போது டேனி கேட்டில் நின்ற அவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஏன் அங்கிள்... ட்டூ த்ரீ டேஸ் நீங்க சிகரெட் புடிக்கவேயில்லையே. விட்டுட்டீங்களா.?"

அந்தப் பையன் சிரித்துக் கொண்டே, "இல்லடா தம்பி... நாலஞ்சு நாளா அங்கிள்க்கு சளி.... அதனாலதான்.! உடம்பு சரியில்லைனா அங்கிள் சிகரெட் புடிக்க மாட்டேன்.!" என்றான்.

அந்தப் பையன் சொன்னதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்த டேனி அடுத்துச் சொன்னான்.

"அப்ப... அங்கிள்க்கு ஒடம்பு சரியில்லாம இருந்தீங்கனாத்தான், ரொம்ப நாள் ஆரோக்யமா இருப்பீங்க போல.!".
.
.
.

3 comments:

chinnapiyan said...

சூப்பர். அப்படி போடு அருவாள நச்சுன்னு உச்சந்தலையில

maithriim said...

Valid point!

amas32

Anonymous said...

cool :)

Post a Comment