Saturday, January 22, 2011

வேண்டா விருந்து

தனது மேனேஜரை, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் என் கணவர்.
எதற்கெடுத்தாலும் டிரீட் கேட்டு தொந்தரவு செய்யும் மேனேஜர் என்பதால், வேண்டா வெறுப்பாய்த்தான் விருந்துக்கு அழைத்திருந்தார்.

மேனேஜர் வந்ததும், டைனிங் டேபிளை ஒழுங்கு செய்வதற்காக நானும் என் கணவரும் உள்ளே போயிருந்தபோது, ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த என் நான்கு வயது மகனிடம் பேச்சுக் கொடுத்தார் அவர்.

"தம்பி, உன் பேரு என்ன..?".

"டேனி.."

"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".

"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".

"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".

"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".

டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.

"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்லற..?".

டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.

"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே... 'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!".
.
.
.

7 comments:

Nanjil Kannan said...

veetula ellarum kola veri pidichavanga thana??

துளசி கோபால் said...

ஹைய்யோ:-)))))))))))))))))))))))

மனசில் களங்கம் படியாத வயசு டேனிக்கு!!!

middleclassmadhavi said...

:)) அப்புறம், நாங்க சிக்கன் சாப்பிட மாட்டோம், மிச்சத்தை உங்கள் வீட்டு நாய்க்குப் போட உங்களிடம் பார்சல் பண்ணிக் கொடுக்கலாம்னு பேசிட்டிருந்ததை பையன் தப்பாப் புரிஞ்சிட்டான்னு வழிஞ்சீங்களா..?!

தோழி said...

// "இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே... 'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!".///

பய்யன்னா இப்படில்ல இருக்கணும்..:)) அப்பாவால முடியாதத பண்ணிட்டான்ல..:))

ஜோதிஜி said...

ம்ம்... பேர் சொல்லும் பிள்ளை.

ஸனுசெல்லம் said...

ஐயோ......ஐஓ..........முடியல...

ஸனுசெல்லம் said...

ஐயோ ......ஐஓ....முடியல....

Post a Comment