சென்னையின் ஒரு பேருந்துப் பயணத்தின் இடையில், முழுக்க முழுக்க ஆன்டிராய்ட் மொபைலில் நான் தட்டச்சு செய்து வெளியிட்ட முதல் கதை:
மிக்கி... சுண்டெலியில் ஒரு சுட்டி எலி.
அது தனது அம்மாவின் பேச்சைக் கேட்காமல், அன்றும் வெளியே விளையாடப் போயிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தை வெகுநாளாய் எதிர்பார்த்திருந்த டாம், இப்போது மிக்கியைத் துரத்தத் துவங்கியது.
துரத்தும் பூனையைக் கண்ட சுண்டெலி மிக்கி, உயிரைக் கையில் பிடித்தபடி தன் வளையை நோக்கி ஓடியது.
குட்டியைத் துரத்தும் டாமைக் கண்ட மிக்கியின் அம்மா தனது வாயைக் குவித்துக் கொண்டு,"லொள்... லொள்..!" என்று நாயைப்போல் கத்தியது.
எலியைத் துரத்திக் கொண்டு வந்த டாம் பூனை, புலியின் குரலைக் கேட்டதுபோல் அலறியபடி திரும்பி ஓட...
இன்னும் உயிர் பயத்தில் நின்றிருந்த குட்டி மிக்கியைப் பார்த்து, அதன் அம்மா சிரித்தபடி சொன்னது.
"இன்னொரு பாஷையைத் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு உபயோகம் பார்த்தாயா..?".
,
,
,
4 comments:
Ithu hindi kaararkalluku porunthatha!
புரியல...
இதுக்கும் "ஆண்டிராய்டு"க்கும் என்ன தொடர்பு?
;-)) நல்லாகீதுங்க :) ஆனா ரொம்ப நாளா ஆண்ட்ராய்டுன்னா என்னாதுன்னு எனக்கு ஒரு டவுட்டு இருக்கு :( அதுக்கும் ஒரு கதை போட்டுடுங்க
ம்ம்ம்.... உண்மைதான்...
Post a Comment