நம்ம சிங் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருக்கு முதலில் கிடைத்த வேலை கொஞ்சம் விநோதமானது.
அது ஒரு நெடுஞ்சாலை கான்ட்ராக்டரிடம், அவர் கான்ட்ராக்ட் எடுத்திருந்த சாலையின் மத்தியில், பட்டையாய் பெயின்ட்டில் வெள்ளைக் கோடு போடும் வேலை.
நம்ம சிங் அந்த வேலையையும், மிக ஆர்வத்துடனும் மிகுந்த செய் நேர்த்தியுடனும் செய்தார்.
அவர் முதல் நாள், ஐந்து கிலோ மீட்டருக்கு அந்த மாதிரி கோடு போட்டிருந்தார்.
அடுத்த நாள், மூன்று கிலோ மீட்டருக்கு அதேபோல் கோடு போட்டிருந்தார்.
அதற்கடுத்த நாள், வெறும் ஒரு கிலோ மீட்டர்தான் கோடு போட்டிருந்தார்.
அவனுடைய கூலியைக் கொடுக்க வந்த அன்று, முதலாளி அவனுடைய நோட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.
"என்ன சிங்கு... வந்த அன்னைக்கு நல்லா செஞ்சிருக்க. அப்புறம், கொஞ்ச கொஞ்சமாய்க் குறைஞ்சு இன்னைக்கு வெறும் ஒரு கிலோ மீட்டருக்குத்தான் பெயின்ட் பண்ணிருக்க. என்ன விஷயம்..?".
கேள்வி கேட்ட முதலாளியைப் பார்த்து, நம்ம சிங் சொன்னார்.
"இல்ல மொதலாளி... இதுக்கு மேல எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. ஒவ்வொரு நாளும் எனக்கும் பெயின்ட் டப்பாவுக்கும் இடையில இருக்கற தூரம் அதிகமாயிட்டே போகுதில்ல..?".
.
.
.
3 comments:
நல்லாதான் இருக்கு
நம்ம மன் மோகன் சிங்க் போல. ஆரம்பத்தில் ஒரு 5 அல்லது 6 வருடங்களுக்கு முன் சர்தாரி ஜோக்குகள் வரும் போதெல்லாம் ஒரு சிலர் நமது இன்றைய பிரதமரை குறிப்பிட்டு இவரை போல வருமா? எவ்லோ வீரமானவர், யோக்கியர், படித்தவர் என்றெல்லாம் கோபித்துக் கொண்டது ஞாபகம் வருகிறது. இப்போதான் தெரிகிறது சோனியக்கு மட்டுமில்லை நிரா ராடியாவுக்கும் அவர் தான் வீட்டு வேலைக்காரன் என்பது.
eppoodi?
singu enrale muttaalgala? this is rong.
கிணற்றுத் தவளை என்பது உங்களுக்கு பொருத்தமான பெயர்...கிணற்றுக்குள் இருந்து பார்த்தால் வானம் வட்டமாகத்தான் தெரியும்,வெளியே வந்து பார்க்கமுயற்சியுங்கள்.
Post a Comment