.
பேசிக்கலாய் தில்லுதுர பயங்கர சோம்பேறி.
வீட்டு வேலைகள் செய்வதென்றால் எட்டிக்காயாய் கசக்கும் அவருக்கு.
வீட்டுக்கு வந்தால் செய்தித்தாள் புரட்டுவதும் டிவியில் சேனல்கள் வேட்டையாடுவதும்தான் அவரது விருப்ப வேலைகள்.
திருமணம் முடிந்த புதிதில், அவர் மனைவி அவரை ஒரு சின்ன வேலைகூட வாங்க முடியாமல் பட்ட கஷ்டம்... கொஞ்ச நஞ்சமில்லை.
ஆச்சு ரெண்டு வருஷம்.
தில்லுதுர அழகான ஆண் குழந்தைக்கு அப்பாவும் ஆகிவிட்டார்.
குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள், உடனிருந்த மாமியாரும் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.
அன்று சனிக்கிழமை.
விடுமுறை என்பதால் தில்லுதுர வீட்டில் இருந்தார்.
காலையில் நியூஸ் பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை தொட்டிலிலேயே உச்சா போய்விட்டான்.
மனைவி ஏதோ வேலையாய் உள்ளே இருக்க, தில்லுதுர வாத்ஸல்யமாய் குரல் கொடுத்தார்.
"ஹனி... உன் பிள்ளை என்ன காரியம் பண்ணிருக்கான்னு வந்து பாரு...!".
உள்ளேயிருந்து வேகவேகமாய் வந்த மனைவி,"ஏங்க...நான் தான் உள்ளே வேலையாய் இருக்கேனில்ல... நீங்க கொஞ்சம் இவனுக்கு பேம்பர்ஸ் மாத்திவிடக் கூடாதா...?".
தில்லுதுர இன்னும் கொஞ்சலாய் மனைவியிடம் சொன்னார்.
"அடுத்த தடவை கண்டிப்பா மாத்திவிடுறேன் ஸ்வீட்டி...!".
கணவனின் கொஞ்சலில் மயங்கிப் போன அவள், சந்தோசமாய் குழந்தைக்கு பேம்பர்ஸை மாற்றிவிட்டுப் போனாள்.
காலை முடிந்து மதியம்.. இதேபோல் ஒரு சிச்சுவேஷன் வர மனைவி தில்லுதுரயிடம் சொன்னாள்,"ஏங்க காலைல என்ன சொன்னீங்க...? வாங்க... இப்ப இவனுக்கு பேம்பர்ஸை மாத்திவிடுங்க...!".
ஒருகணம் குழப்பத்துடன் மனைவியைப் பார்த்த தில்லுதுர பிறகு தெளிவான குரலில் சொன்னார்.
"டார்லிங்... அடுத்த தடவைனு நான் சொன்னது அடுத்த பேம்பர்ஸுக்கு இல்லை... அடுத்த குழந்தைக்கு...!".
.
.
.
6 comments:
NICE
சொந்த அனுபவமோ ?
ரைட்டு :)
//"டார்லிங்... அடுத்த தடவைனு நான் சொன்னது அடுத்த பேம்பர்ஸுக்கு இல்லை... அடுத்த குழந்தைக்கு...!".//
ஹி ஹி .. உண்மைலேயே அவருக்கு தில்லு ஜாஸ்திதாங்க ..!!
அண்ணா அப்படியே என் ப்ளாக் வாங்க ..!!
Superuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
ha ha ha...super... remba thelivaa thaan samaalikkareenga pola...ha ha ha
gr8 escape... ;)
Post a Comment