.
அது ஒரு பௌத்த விஹாரம்.
அதனுள் மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது.
ஒரு வயோதிகத் துறவி அந்த விஹாரத்திற்கு உள்ளே வந்தார்.
அமைதியாக நெடுநேரம் தியானத்தில் லயித்திருந்தார்.
தியானம் முடிந்து அமைதியாக வெளியேறினார்.
இது தினந்தோறும் நிகழ்ந்தது.
விஹாரத்தின் தலைவர் இதனை வியப்புடன் கவனித்து வந்தார்.
அன்றும் வழக்கம்போல் துறவி வந்தார்... தியானத்தில் ஆழ்ந்தார்.
தியானம் முடிந்து கிளம்பும்போது மடத்தின் தலைவர் அவரிடம் கேட்டார்.
"அய்யா... நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சொன்னார்...?"
"அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்...!".
அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைவர்.
"அப்படியா? அதுசரி... அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்...?"
அந்த வயோதிகத் துறவி அமைதியாக பதில் சொன்னார்.
"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!".
.
.
.
3 comments:
/"நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பேன்...!". //
நானும் அப்படித்தான் ..
Nice...!
அருமைங்க....
Post a Comment