Wednesday, September 1, 2010

டேய் பட்டாபி

பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான்.

சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார்.

"அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?".

பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான்.

"எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!".

சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?"

பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான்.

"ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!".

சித்திரகுப்தன் தொடர்ந்தார்.

"நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?".

பட்டாபி எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான்.

"இல்லை... ஏனக்கு காதல்னாலே அறவே பிடிக்காது..!" .

சித்திரகுப்தன் பேரேடை புரட்டியபடியே அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"உனக்கு மிகப் பிடித்த நண்பர்கள் பெயரைச் சொல்லு...!"
"எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது..!".

சித்திரகுப்தன் வியப்புடன் பட்டாபியை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"வீட்டுல நாய், பூனைனு ஏதாவது வளர்த்திருக்கியா..?"

பட்டாபி அதற்கும் அதேபோல் ஒரு அலட்சிய பாவத்துடனேயே பதில் சொன்னான்.

"எனக்கு மிருகங்கள்னாலே அலர்ஜி... அதனால அப்படி எதுவும் வளர்க்கல..!"

பட்டாபி பதில் சொன்னதும் நெற்றியைச் சுருக்கியவாறே யோசித்த சித்திரகுப்தன் மெல்லச் கேட்டார்.

"தம்பி... நீ இறந்து ரொம்ப நாளாயிருக்கும் போலருக்கே. ஆனா, ரொம்ப லேட்டா வந்திருக்க...?".
.
.
.

5 comments:

சென்ஷி said...

அருமைங்க....

Unknown said...

மனிதன் என்பவன் சமூகப்பிராணி என்று அழைக்கப்படுகிறான். அப்படியிருக்க இவன் இருந்தாலும் இறந்ததற்கு சமம்தானே.

பெசொவி said...

சூப்பர்!!!!!!!!!!!!!!! வர்ணிக்க வார்த்தையே இல்லை, வாழ்த்துகள்!

செல்வா said...

உண்மைலேயே அழகான தத்துவம் அண்ணா ., கலக்கல் ..!!

Unknown said...

Super..!!

Post a Comment