Wednesday, June 16, 2010
டேனியின் அம்மா
டேனி தன் அப்பாவிடம் 'திருமணம் என்றால் என்ன...' என்பது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.
எவ்வளவோ சொல்லியும் அவனுக்குப் புரியாமல் போகவே... அவனது அப்பா என்னை எங்கள் திருமண ஆல்பத்தை எடுத்து வரச் சொன்னார்.
சமையலறையில் வேலையை முடித்துவிட்டுப் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த நான் கைகளைத் துடைத்துக் கொண்டு போய் நாற்காலியை எடுத்து, பீரோவின் அருகில் தள்ளி...
பீரோவின் மேலே இருந்த அந்தப் பெரிய திருமண ஆல்பத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுத்துவிட்டுத் திரும்பவும் சமையலறைக்குள் திரும்பவும் நுழைந்து விட்டேன்.
வெளியே அப்பா மகன் இருவரின் குரல்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.
அவர் ஏதோ சொல்லிக்கொண்டே வர... அவனது சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நான் சாப்பிடத் தேவையானவற்றை மேசையில் எடுத்து வைக்கும்போது அவர் ஒருவழியாய் அவனுக்குத் திருமணம் என்ரால் என்ன என்பதை வெற்றிகரமாய்ப் புரியவைத்துவிட்டு அலுப்புடன் ஆல்பத்தை மூடி வைத்துக் கொண்டிருந்தார்.
டேனியும் ஒருவாறு புரிந்த முகபாவத்துடனே எழும்போது, அவனுக்கே உரிய குழந்தைத்தனத்துடன் அப்பாவிடம் கேட்டான்.
"அப்ப இப்படித்தான்... அம்மா நம்ம வீட்டுக்கு வேலை செய்ய வந்தாங்களாப்பா...?".
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//"அப்ப இப்படித்தான்... அம்மா நம்ம வீட்டுக்கு வேலை செய்ய வந்தாங்களாப்பா...?/
hahahha sema cute dany
என்ன வில்லத்தனம்?
:)
:)))
33 சதவீதமல்ல இங்கே மட்டும்தான் 100 சதவீத இடஒதுக்கீடு.
டேனி அப்பா, நீங்களும் வீட்டில் வேலை செய்யுங்கள்.
Post a Comment