Monday, June 7, 2010

பர்ச்சேஸ் ஆபிஸர்




நான் கோவையில் ஒரு கம்பெனியில் பர்ச்சேஸ் ஆபிஸராய் இருந்தபோது நடந்தது இது.


நான் ஒரு கம்பெனிக்கு பர்ச்சேஸ் ஆர்டர் போட வேண்டி இருந்தது.

அது ஒரு சின்ன எலக்ட்ரானிக் ஐட்டம்.

டிபார்ட்மென்டில் ஐட்டம் நெம்பர் 699 என்று கொடுத்திருந்தார்கள்.

நானும் அப்படித்தான் போட்டு அனுப்பியிருந்தேன்.

ஆனால், ஒரு வாரம் கழித்து மெட்டீரியல் வந்தபோது பார்த்தால், அவர்கள் தவறுதலாய் ஐட்டம் நெம்பர் 669-ஐ அனுப்பியிருந்தார்கள்.

பெட்டியில் சரியாய் 699 என்றிருந்தாலும் உள்ளே பொருளில் 669 என்று இருந்தது.


பார்க்க எண்கள் இரண்டும் ஒரே போலிருந்ததால் இந்தத் தவறு நடந்திருக்கக்கூடும்.

எனவே, நான் அவர்கள் தவறைச் சுட்டிக்காட்டி, இந்தக் காலதாமதத்தால் என் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து விளக்கமாய் ஒரு கடிதம் எழுதி, அதில் இனி பொருளை அனுப்பும் போது கவனமாய் பார்த்து அனுப்புமாறு அவர்களைப் பணித்திருந்தேன்.

ஒரு வாரம் போயிருக்கும்.

மீண்டும் அதே பொருளை எனக்கு அந்தக் கம்பெனியிலிருந்து அனுப்பியிருந்தார்கள்.

கூடவே ஒரே ஒரு வரியில் ஒரு கடிதம்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது.

"தயவுசெய்து ஐட்டம் நெம்பரைத் தலைகீழாய்ப் பார்க்கவும்...!".
.
.
.