Tuesday, June 29, 2010

தில்லுதுரயும் வாட்ச்மேனும்



தில்லுதுர அன்று ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ண வேண்டியிருந்ததால் அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தார்.

வாட்ச் வேறு நின்றுவிட்டதால் நேரம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை.

கொஞ்சம் லேட்டாகிவிட்டதோ என்று வேறு தோன்றிக் கொண்டிருந்தது.

வழியில் ஒரு மனநல மருத்துவமனையைக் கடக்கும்போது அதன் வாட்ச்மேன கேட்டில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுர அவரைக் கூப்பிட்டார்.

"வாட்ச்மேன்... கொஞ்சம் டைம் என்னனு சொல்ல முடியுமா...?".

வாட்ச்மேன் திரும்பி தில்லுதுரயைப் பார்த்து, "ஒரு நிமிஷம்..." என்றவர் தனது பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு சிறு குச்சியை எடுத்தார்.

அதை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டு பிறகு அதைத் தரையில் நட்டு, ஆசாரிகள் உபயோகப்படுத்தும் ஒரு கருவியை எடுத்து அந்தக் குச்சி நேராய்த்தான் நிற்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டார்.

பிறகு ஒரு காம்பாஸை எடுத்து வடக்குத் திசையை குறித்துவிட்டு, ஒரு ஸ்கேலை எடுத்து அந்தக் குச்சியின் நிழலை அளந்தார்.

பிறகு, எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டு, தன்னுடைய ஐட்டங்களை எல்லாம் மறுபடி பாக்கெட்டில் வைத்துவிட்டு ஒரு கால்குலேட்டரை எடுத்தார்.

கொஞ்சநேரம் ரொம்ப சீரியஸாய் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு, அவர் தில்லுதுர பக்கம் திரும்பினார்.

"நேரமானதுக்கு மன்னிக்கணும் சார்... இப்ப நேரம் சரியாய் அட்ஜஸ்ட் ஆறு நாற்பது. மேலும் இன்றைய தேதி ஜூன் 29,வருஷம் 2010...".

அந்த மனிதன் தனக்கு பெரிதாய் உதவவில்லை என்றாலும்... தில்லுதுர அவனது வேலையில் அசந்து போய் தனது வாட்ச்சை அட்ஜஸ்ட் செய்தபடியே கேட்டார்.

"நீங்க டைம் சொன்னவிதம் உண்மையிலேயே ஆச்சர்யப்படத்தக்கதாய் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் மேகங்கள் மூடிய நாட்களிலும் இரவுகளிலும் இந்தக் குச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்... எப்படி நேரம் பார்ப்பீர்கள்...?".

தில்லுதுர இப்படிக் கேட்டதும், அந்த வாட்ச்மேன் தனது வலது கை மணிக்கட்டை காட்டியவாறே சொன்னார்.

"இந்த வாட்ச்ல பாத்துக்குவேன்...!".
.
.
.

4 comments:

RAVI said...

உங்கள் வலைப்பூ மிகவும் அருமையாக உள்ளது.
என்னைப்போன்ற அவசரக்காரன்களுக்கு நிச்சயம் சிரிப்பூட்டும்.
சிரிப்பையே சில காலமாக மறந்துவிட்டேன்.
ஏனென்றால் எனது வலைப்பூவை சுற்றி வந்து பாருங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் ரவி
www.avasaramda.blogspot.com

Chithran Raghunath said...

ஒருவர்: எப்படிங்க உங்க வாட்ச் இவ்ளோ புதுசா இருக்கு?
மற்றொருவர்: நான்தான் இதில டைம் பாக்கறதே இல்லையே..

மேற்படி ஜோக் ஞாபகம் வந்தது இதைப் படித்தபோது.

மங்களூர் சிவா said...

எதோ ஒரு படத்துல மணிவண்ணன் காமெடில ஒருத்தர் கழுதை வாலை தூக்கி பாத்து டைம் சொல்லுவார் ஆச்சரியப்பட்டு எப்படின்னு மணிவண்ணன் கேட்பார்,

உக்காந்து வாலை தூக்கி பாத்தா தூரத்துல இருக்கிற கடிகாரம் தெரியும் :))

வெங்கட்ராமன் said...

முடியலை. அலுதுருவேன்.

Post a Comment