Monday, June 14, 2010

கால் பந்து ஸ்பெஷல்




ஒரு மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு மனோதத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தது.

ஆசிரியர் வகுப்பு மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"நீங்கள் இப்போது நன்றாகத் தேறிவிட்டீர்கள். நான் இப்போது சில கடினமான வியாதியஸ்தர்களின் செயல்பாடுகளைக் கூறுகிறேன். நீங்கள் அந்த வியாதிக்குரியவர் யார் என்று கூற வேண்டும். தயாரா...?".

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.

"தயார்...!".

ஆசிரியர் தொடர்ந்தார்.

"நான் சொல்லும் இந்தப் பேஷன்ட் நல்ல உடை அணிந்திருப்பார். நாகரீகமாய் இருப்பார்.உட்கார்ந்திருப்பவர் வேகமாக எழுந்து கை கால்களை உதைத்தபடி நடப்பார்.வாயை சுற்றிக் கைகளைக் குவித்து திடீரெனக் கத்துவார்.கைகளை மேலே உயர்த்தி ப்ரார்த்தனை செய்வது போல அலறுவார்.வேகமாய் வந்து அமைதியாய் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்து அமர்ந்து கொள்வார். பிறகு மெதுவாய்த் தலையை உயர்த்தி கண்கள் மட்டும் தெரியும்படி பார்ப்பார். சமயத்தில் அழக்கூடச் செய்வார்..."

சொல்லிக் கொண்டே வந்த அந்த ஆசிரியர் சொல்லுவதை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

"எனி கெஸ்...?".

எல்லா மாணவர்களும் விழிக்க... ஒரு மாணவன் மட்டும் கையைத் தூக்கினான்.

ஆசிரியர் ஆச்சர்யத்துடன் கேட்டார்.

ஏனென்றால், அப்படியொரு வியாதியஸ்தரை அவரே பார்த்ததில்லை.

"உன்னால் நான் சொன்ன வியாதிக்குரிய அந்த வியாதியஸ்தர் யார் எனச் சொல்ல முடியுமா...?"

"முடியும்...".

ஆசிரியர் சந்தேகத்துடனே கேட்டார்.

"அப்படியானால் சொல்லு... யார் அவர்...?".

அந்த மாணவன் உறுதியான குரலில் பதில் சொன்னான்.

"அந்த வியாதியஸ்தர் நீஙகள் சொன்ன அடையாளப்படிப் பார்த்தால்... அநேகமாய் அவர் ஒரு 'ஃபுட் பால் கோச்' ஆக இருக்கலாம்...!".
.
.
.

1 comment:

சென்ஷி said...

//"அந்த வியாதியஸ்தர் நீஙகள் சொன்ன அடையாளப்படிப் பார்த்தால்... அநேகமாய் அவர் ஒரு 'ஃபுட் பால் கோச்' ஆக இருக்கலாம்...!".//

அந்த மாணவர் அட்ரெஸ் இருந்தா சொல்லுங்க. அந்த பக்கம் ட்ரீட்மெண்ட் யாரும் போகாம பாத்துக்கறோம் :)

Post a Comment