Wednesday, June 23, 2010

மனநல மருத்துவமனை - பயணக் கட்டுரை




விடுமுறை முடிந்து புதிய வகுப்புக்கு வந்த மாணவர்களை 'விடுமுறைக்கு எங்கே போனீர்கள்...?' என்ற தலைப்பில் ஒரு பயணக் கட்டுரை எழுதச் சொன்னபோது டேனி என்னும் ஒரு சிறுவன் எழுதிய கட்டுரை இது.


"நான் பெரும்பாலும் விடுமுறைக்கு என் தாத்தா பாட்டி வீட்டுக்குத்தான் போவேன்.

செங்கல்லும் ஓடும் உள்ள அந்த கிராமத்து வீடு...

முழுவதும் அன்பால் நிறைந்தது.

ஆனால், இப்போது தாத்தாவும் பாட்டியும் அங்கே இல்லை.

அவர்கள் வயதானதால் சற்று ஞாபகம் குறைந்து அதற்காக கோவையில் உள்ள ஒரு ஹோமுக்குப் போய்விட்டார்கள்.

அந்த ஹோமில், அவர்களைப் போலவே நிறைய மக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே சின்னச் சின்ன அறைகளில் வாழ்கிறார்கள்.

அவர்கள் பெரிய மூன்று சக்கர வாகனங்களை உபயோகிக்க அங்கே பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அங்கே அவர்களுடைய பெயரை ஒரு அட்டையில் எழுதி அவர்களுடைய கழுத்தில் மாட்டிவிட்டிருக்கிறார்கள்.

இல்லாவிட்டால், அவர்கள் யார் என்பது அவர்களுக்கே ஞாபகம் இருக்காது.

அவர்கள் அங்கே நிறைய கேம்ஸ் விளையாடுகிறார்கள்; எக்ஸர்சைஸ் செய்கிறார்கள்.

ஆனால், அதை அவர்கள் சரியாய்ச் செய்வதில்லை.

அந்த ஹோமில் ஒரு ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.

அதில், அவர்கள் எல்லோரும் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கென்னவோ அவர்கள் நீச்சலையும் மறந்துவிட்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நீங்கள் அந்த ஹோமுக்குப் போனால் அங்கே கேட்டின் முன்னே ஒரு சின்ன கூண்டில் ஒரு பெரியவரைப் பார்க்கலாம்.

அவரைத் தாண்டி இவர்களில் ஒருவர்கூட வெளியே போகவோ வரவோ முடியாது.

அவரும் இங்கே முன்பு இப்படி வந்தவர்தான்.

இப்போது சற்று பரவாயில்லை ஆகி ஹோமிலேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.

என் பாட்டி மிக அற்புதமாய் பாயாசம் வைப்பார்கள்.

அதை அவரும் இப்போது மறந்திருப்பார் நினைக்கிறேன்.

அங்கே யாரும் சமைப்பதில்லை, சாப்பிடுகிறார்கள்... அவ்வளவுதான்.

அவர்கள் எல்லோரும், எல்லா நாளும் ஒரே மாதிரி, ஒரே சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறார்கள்.

முன்பெல்லாம் என் பாட்டி அடிக்கடி சொல்வாள்.

'வாழ்நாள் பூராவும் உன் தாத்தா உழைத்தார். இப்போது இப்ப்டி ஆகிவிட்டது...' என்று.

இப்போது பாட்டிக்கும் அதேபோல் ஞாபகமறதி வந்துவிட்டது.

நான், என் தாத்தா பாட்டி இருவரும் இங்கே என் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால், கேட்டிலிருக்கும் அந்தப் பெரியவர் விடமாட்டார் என்றே நம்புகிறேன்.

நான் பெரியவனாகி ஒருவேளை எனக்கும் இதேபோல் ஆகலாம்.

அப்போது, நான் அந்த ஹோமுக்கே போக விரும்புகிறேன்.

அதிலும், அந்த கேட்டிருக்கும் பெரியவரைப் போல் ஆகவே விரும்புகிறேன்.

ஆனால்,

நான் அவ்வாறு கேட்டில் இருந்தால்...

 ஹோமில் இருக்கும் முதியவர்களை... அவர்களுடைய பேரன் பேத்திகளைப் பார்க்கக் கண்டிப்பாய் அனுமதிப்பேன் என்பது மட்டும் உறுதி...!".
.
.
.

5 comments:

vasu balaji said...

oh my my. இன்று பார்க்கும் இரண்டாவது இது. href="http://www.youtube.com/watch?v=ybxNkpS5q-g"முதல் இங்கே

ரோகிணிசிவா said...

nalla irukunga

மங்களூர் சிவா said...

ரொம்ப சென்டிமென்டலா இருக்கே!?

Unknown said...

ரொம்ப டச்சிங்கா இருக்குப்பா....!

வெங்கட்ராமன் said...

குறுத்தோளைகளுக்கு பலுப்போளைகளை பராமரிக்க எண்ணமில்லை. இன்று குறுத்தொளைகளாக இருக்கும் நாமும் நாளை பலுப்போளைகள் தான் என்பதை மறந்துவிடுகிறோம்.

Post a Comment