Monday, June 21, 2010

டிக்காலா




ஷஹானாவின் கணவன் ஒரு வீட்டுக் கோழி.

எந்நேரமும் டிவி.. டிவி.. டிவிதான்...!

ஒரு வேலைக்குப் போகலாம்... என்னவாவது சம்பாதிக்கலாம்னு எதுவும் கிடையாது.

வீட்டை விட்டே வெளியே வராதவன் எங்கே வேலைக்குப் போறது... சம்பாதிக்கறது...?

ஷஹானா சொல்லிப் பார்த்தாள்.

சண்டை போட்டுப் பார்த்தாள்.

திட்டிக்கூடப் பார்த்துவிட்டாள்.

அவன் எதுக்கும் அசையறதா இல்ல.

கூட வேலை பாக்கற பொண்ணு சொன்னானு ஒரு மனோதத்துவ டாக்டரப் பாக்கப்போனா பொண்ணு.

டாக்டர் எல்லாக் கதையையும் கேட்டுட்டு, "அவரோட கவனத்த திருப்பற மாதிரி ஏதாவது பண்ணுங்க... ஏதாவது புதுசா பெட் அனிமல்ஸ்...கொஞ்சம் மாற்றம் வரும்... !" என்றார்.

ஷஹானா யோசிச்சுக்கிட்டே போகும்போது வழியில அந்தக் கடையப் பாத்தா.

அது வீட்டுல வளக்கற மிருகம் பறவை விக்கிற கடை.

டாக்டர் சொன்ன ஐடியாவை புடிச்சுக்கலாம்னு ஷஹானா நேரா அந்தக் கடைக்குள்ள புகுந்துட்டா.

கடைல எப்பவும் போல நாய், புறா, கிளி, முயல் எல்லாம் விக்கறதுக்குன்னு இருந்தது.

ஷஹானாவுக்கு இதையெல்லாம் தவிர வேற ஏதாவது புதுசா இருந்தா பரவாயில்லைனு தோணுச்சு.

அதைக் கடைக்காரர்கிட்ட கேட்கவும் செஞ்சா.

கடைக்காரர் சொன்னாரு, "அதோ அந்த ரூம்ல நீங்க கேட்ட மாதிரி புதுசா ஒரு பறவை இருக்கு... வேணும்னா வந்து பாருங்க..."

ஷஹானாவுக்கு அந்தப் பறவையப் பாத்தவுடனே பயந்து போயிட்டா.

கர்ண கொடூரமா... கழுகைவிட பெரியதாய் மூக்கும் முடி முளச்ச கால்களும் பெரிய பெரிய நகங்களும் முட்டை முட்டையாக் கண்ணும்...

ஷஹானா கேட்டா.

"என்ன பறவைங்க இது...?"

கடைக்காரர் பதில் சொன்னாரு.

"இந்தப் பறவை பேரு டிக்காலா. மிகப் பெரிய டெஸ்ட்ராயர்...!'

"இது அப்படி எதை அழிக்கும்...?'

"காட்டறேன் பாருங்க..." என்ற கடைக்காரர் அந்தப் பறவையை பார்த்துச் சொன்னாரு,"டிக்காலா டேபிள்...!"

டிக்காலா உட்கார்ந்த இடத்திலிருந்து சொய்ங்கென்று ரெக்கை ரெண்டயும் விரிச்சுக்கிட்டுப் அந்த டேபிள் மேல பாய்ஞ்சது.

ஒரு பத்து செகண்ட்டுதான் இருக்கும்.

அந்தக் காலால டேபிளப் பிராண்டி மூக்கால கொத்தி கொஞ்ச நேரத்துல அந்த டேபிள் கீழ சுக்கல் சுக்கலாக் கிடந்தது.

கடைக்காரர் அப்பவும் விடல.

"டிக்காலா கப்போர்ட்...!"

அந்தப் பறவை அப்படியே கப்போர்டப் பார்த்துப் பறந்துச்சு.

இன்னொரு பத்து செகண்ட்தான் இருக்கும்

கப்போர்டக் காணோம்.

இந்தப் பறவைய வாங்கிட்டுப் போனா கணவனிடம் கொஞ்சமாவது மாற்றம் வரும்னு தோணுச்சு.

ஷஹானா முடிவு செஞ்சா.

'இது... இதுதான் கரெக்ட்டு'னு டிக்காலவ வாங்கிக்கிட்டு வேகவேகமா வீட்டுக்கு வந்தா.

வீட்டுக்கு வந்தா புருஷன் எப்பவும் போல டிவியே கதின்னு கெடக்கறான்.

ஷஹானா ஆசை ஆசையா பக்கத்துல போனா.

"என்னங்க.. என்னங்க...?"

அவனோ டிவியை விட்டுக் கண்ணை எடுக்காமக் கேட்டான்.

"என்ன...?"

"இங்க பாருங்களேன்... உங்களுக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்...!"

அவன் திரும்பிப் பார்க்காமலே எரிச்சலுடன் கேட்டான்.

"என்னடி அது...?"

ஷஹானா ஆவலோட அந்தப் பறவை பேரச் சொன்னா.

"டிக்காலா...!".

டிவி பார்ப்பதைக் கெடுக்கிறாளேன்னு கடுப்பில் அவன் பதில் சொன்னான்.

"ம்ம்... டிக்காலா மயிரு...!".
.
.
.

3 comments:

மங்களூர் சிவா said...

ஹா ஹா
அந்த கணவன் சொன்னதுக்கப்புறம் ரெண்டு பேரோட நிலமை!?!?!?
:))))

Unknown said...

டிக்காலாவ அப்படியே எங்க வீட்டுக்கு கொஞ்சம் அனுப்பி வைங்க...!

கௌதமன் said...

:))))))

Post a Comment