Tuesday, June 8, 2010

சிங்கத்துக்கு சவால்

காட்டில் ஒரு நரி தாகத்துடன் தண்ணீருக்காக அலைந்தது.

நல்ல கோடை.

கத்திரி வெயில் வேறு.

எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை.

அலைந்து அலைந்து கடைசியில் அது ஒரு தண்ணீர்ச் சுனையைக் கண்டது.

வேகமாய் அந்த நரி ஒடிப் போய் தண்ணீரைக் குடித்து தாகம் தீர்ந்ததும் அது தன் முகத்தை அந்தத் தண்ணீரில் கண்டது.

'ஆஹா... நான் தான் எவ்வளவு அழகாய் இருக்கிறேன். இந்தக் காட்டு மிருகங்கள் என்னை விட்டுவிட்டு கண்ட சிங்கத்தை எல்லாம் ராஜாவாய்க் கொண்டாடி அலைகின்றனவே....!' என்று எண்ணியபடி ஒரு பெருங் குரல் எடுத்துக் கத்தியது.

"காட்டு மிருகங்களே கேளுங்கள்... இனி நான் தான் இந்தக் காட்டுக்கு ராஜா...!".

நரியின் குரல் ஓய்வதற்குள்ளேயே மறுபக்கத்திலிருந்து ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

"யாரடா அது...? என்ன சொன்னாய்...?"

சிங்கத்தின் குரல் கேட்டதும் நரி மெல்லிய குரலில், "அண்ணா... தண்ணி கொஞ்சம் அதிகமாயிட்டதால உளறிட்டேன்...!  மன்னிச்சுக்கங்க அண்ணா...!" என்று சொல்லிவிட்டு ஓடியே போய்விட்டது.
.
.
.

4 comments:

க.பாலாசி said...

நரி தந்திரம் இதுதானோ... சரிதான்...

Rajaraman said...

Nalla irruku

Rajaraman said...

nalla irruku

மங்களூர் சிவா said...

'தண்ணி' கொஞ்சம் ஜாஸ்தியானாலே இப்பிடித்தான் இல்லியா
:))))))))))))

Post a Comment