Wednesday, June 16, 2010

கிளியும் காக்கையும்






நகரத்தின் ஒரு மரத்தில் வாழ்ந்து வந்தன ஒரு கிளியும் காக்கையும்.

கிளிக்கு எப்போதும் காக்கையைக் கண்டால் இளப்பம்.

'பார்... இந்தக் காக்கை எவ்வளவு கருப்பாய் இருக்கிறது. இதனுடன் இந்த மரத்தில் சேர்ந்து வாழ்வதை நினைக்கவே அசிங்கமாக இருக்கிறதே...!" என்று கிளி எப்போதும் மனதுக்குள் எண்ணிக்கொண்டே இருக்கும்.

சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் அந்தக் கிளி காக்கையை இன்ஸல்ட் வேறு பண்ணிக்கொண்டே இருக்கும்.

காக்கை இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே கண்டுகொள்ளாது.

ஒருநாள்... நகரத்துச் சிறுவர்கள் இருவர் கிளியைக் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

அவர்கள் வீட்டில் கிளியை வைத்து... நாக்கில் பூண்டையெல்லாம் தேய்த்து மனிதர்கள் போல பேச ட்ரெய்னிங் எல்லாம் கொடுத்தார்கள்.

இதற்கெல்லாம் அப்புறம் ஒருநாள்....

அந்த வீட்டின் விசேஷத்தன்று படையலைப் படைத்துச் சாப்பிடக் காக்கையை "கா..கா..."வென அழைத்தனர்.

சாப்பிட வந்த காக்கை கிளியைப் பார்த்துச் சொன்னது.

"கிளியே... அழகால் கர்வம் கொள்ளக் கூடாது. பார்... உன் அழகே இப்போது உனக்கு எதிரியாய் மாறிவிட்டது. மேலும் பார்... உன்னை அவர்கள் போலப் பேசவைக்க உன்னை இந்த மனிதர்கள் எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள்..? ஆனால், என்னை அழைக்கவோ பார்... அவர்களே என்னைப் போலத்தானே குரல் கொடுக்கிறார்கள்...!".
.
.
.

5 comments:

எல் கே said...

:)))) nice story and moral

க.பாலாசி said...

சரிதாங்க...அழகு ஆணவத்தை தரும் (சிலருக்கு..)

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல நீதி.

SRK said...

Good one with nativity.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றாக இருக்கின்றது

Post a Comment