Tuesday, June 15, 2010

தில்லுதுர அட் கம்ப்யூட்டர்


தில்லுதுர படிச்சு முடிச்சு எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு சாப்ட்வேர் கோர்ஸ் வேற படிச்சாரு.

அதப் படிச்சுட்டு நானும் ஒரு சாப்ட்வேர் ஆளுன்னு ஒரு கம்பெனில வேலைக்கு வேற சேர்ந்தாச்சு.

ஒரு நாள் அவர் கம்பெனில பாஸ்வேர்ட் ஆடிட் ஒண்ணு நடந்துச்சு.

எல்லோரும் அவரவர் பாஸ்வேர்ட் என்னனு கம்பெனிக்குச் சொல்லணும்.

எல்லோர்கிட்டயும் பாஸ்வேர்ட் கேட்டுக்கிட்டே வந்தவங்க தில்லுதுரகிட்ட அவர் பாஸ்வேர்டை கேட்டதும் அப்படியே ஷாக்காயிட்டாங்க.

அந்த டீம் கேப்டன் கேட்டார்.

"எங்கே... உங்க பாஸ்வேர்டை இன்னொரு தடவை சொல்லுங்க...?".

தில்லுதுர அசராமல் சொன்னார்.

"கமல்ஹாசன்ரஜினிகாந்த்விஜய்ரித்தீஷ்டெல்லிசூர்யாஅஜித்தனுஷ்சிம்பு".

அவர் கேட்டார்.

"எதுக்காக இவ்வளவு பெரிய பாஸ்வேர்ட்...? எனக்கு ஒண்ணும் புரியல...!".

தில்லுதுர அதற்கு சீரியஸாய் இப்படி பதில் சொன்னார்.

"கம்ப்யூட்டர்லதான் புது பாஸ்வேர்ட் ஜெனெரேட் பண்ணறப்ப பாஸ்வேர்ட் எட்டு கேரக்டருக்கு குறையாமல் இருக்கணும்... அதுக்கு இடையில ஒரு கேப்பிடலாவது இருக்கணும்னு போட்டிருந்ததே...!" என்றார்.
.
.
.

9 comments:

எல் கே said...

hahaha ur posts always hillarious keep it up

ஜெயந்த் கிருஷ்ணா said...

Super ..:)

சென்ஷி said...

:)

Unknown said...

எட்டு கேரக்டர் ரைட்டு.
அதுக்காக ரித்தீஷ் கூடவா...?

மங்களூர் சிவா said...

/

"கம்ப்யூட்டர்லதான் புது பாஸ்வேர்ட் ஜெனெரேட் பண்ணறப்ப பாஸ்வேர்ட் எட்டு கேரக்டருக்கு குறையாமல் இருக்கணும்... அதுக்கு இடையில ஒரு கேப்பிடலாவது இருக்கணும்னு போட்டிருந்ததே...!
/

ROTFL
:))

Venkat M said...

Super.... :-) Will fwd this to my friends.

Anonymous said...

மிகவும் அருமை....

ராஜவம்சம் said...

எப்டிங்ணா!!!

கவிதா said...

very nice

Post a Comment