Saturday, June 12, 2010

தில்லுதுர அட் பார்ட்டி





தில்லுதுர ஒரு பந்தா பேர்வழி.

அவருடைய அலட்டல்கள் மிகுந்த ருசிகரமானவை.

அவர் ஒருமுறை ஒரு வைர மோதிரம் வாங்கியிருந்தார்.

அடுத்தநாள் அலுவலகத்தில் பார்ட்டி வேறு.

அத்தனை நபர்களும் வந்தே தீருவார்கள்.

தில்லுதுரைக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன...?

அவர்தான் பார்ட்டிக்கு முதலில் வந்தார்.

வருகின்ற எல்லோரிடமும் தானே வலிய வலிய சென்று பேசினார்.

வைர மோதிரம் கண்களில் பட கைகளை ஆட்டி ஆட்டி நீட்டி நீட்டிப் பேசிப் பார்த்தார்.

அவருடைய கஷ்டகாலமோ என்னவோ ஒரு பயலும் அவரது வைர மோதிரத்தைக் கவனிக்கவில்லை.

இன்றைக்கு பார்ட்டி முடிவதற்குள் ஒருத்தனாவது அதைக் கவனிக்கவில்லை என்றால் அவருக்குத் தூக்கம் வராது.

என்ன செய்யலாம்..?

தில்லுதுர சரியான சான்ஸுக்குக் காத்திருந்தார்.

பார்ட்டியோ தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

பார்ட்டியின் இடையில் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் ஒரு விநாடி சட்டென அமைதியான போது தில்லுதுரயின் குரல் சப்தமாய் எதிரொலித்தது.

"சே... என்ன ஒரு புழுக்கம்..? என்ன ஒரு வியர்வை..? இந்த வைர மோதிரத்த கழற்றி வச்சாத்தான் சரியா இருக்கும்...!"
.
.
.

4 comments:

எல் கே said...

hahaha :)

Unknown said...

விளம்பரம் முக்கியம்

Anonymous said...

Meens.. really nice stuff. wher do u get this stuff... Keep posting... i rememebr i used to sit in that thindu near my house and hear all ur stories & jokes... ur gang was great...

Murugesh...Min Nagar

சென்ஷி said...

செம்ம சூப்பர் ;)

Post a Comment