Monday, June 7, 2010

போஸ்ட் ஆபீஸிலிருந்து சொர்க்கம் வரை



ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர் அந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒருவாரம் உரையாற்ற வந்திருந்தார்.
அன்று அவருக்கு ஊருக்குப் பணம் அனுப்பவேண்டிய ஒரு கட்டாயம்.
ஊரில் தபால் நிலையம் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் அலைந்து கொண்டிருந்த அவர் எதிரில் வந்த ஒரு சிறுவனை நிறுத்தினார்.
“தம்பி… உன் பேர் என்ன…?”.
அவன் பதில் சொன்னான்.
“டேனி…”.
“நீ இந்த ஊரை சேர்ந்தவனா…?”.
“ஆமாம்…”.
“இங்கே தபால் நிலையம் எங்கே இருக்கிறதென்பது தெரியுமா…?”.
அச்சிறுவன் தெளிவாய்க் கூறினான்.
“நேராய்ப் போய்... மூன்றாவது வலதில் திரும்பி, அடுத்த இரண்டாவது இடதில் திரும்பினால்... இடது பக்கம் நாலாவது கட்டிடம்தான் போஸ்ட் ஆபிஸ்…!”.
“நன்றி தம்பி…” என்ற அந்தப் பெரியவர் மீண்டும் அவனை அழைத்து, “தம்பி… இன்று மாலை மாரியம்மன் கோவிலுக்கு வாயேன். சொர்க்கதிற்கு போவது எப்படி என்ற தலைப்பில் பேசுகிறேன்… உனக்கும் உபயோகமாய் இருக்கும்…!”.
“இல்லை ஐயா… நான் வரவில்லை…!”.
பெரியவர் கேட்டார்.
“ஏன் தம்பி… உனக்கு கடவுள்மீது நம்பிக்கை இல்லையா…?”.
டேனி அமைதியாய்ப் பதிலளித்தான்.
“இல்லை ஐயா… எனக்கு உங்கள்மேல்தான் நம்பிக்கை இல்லை. இதோ இங்கே இருக்கிற இந்தப் போஸ்ட் ஆபிஸுக்கே உங்களுக்கு வழி தெரியவில்லை… நீங்கள் எப்படி எனக்கு சொர்க்கதிற்கு வழி காட்டப் போகிறீர்கள்…?”.
.
.
.

2 comments:

சென்ஷி said...

//இங்கே இருக்கிற இந்தப் போஸ்ட் ஆபிஸுக்கே உங்களுக்கு வழி தெரியவில்லை… நீங்கள் எப்படி எனக்கு சொர்க்கதிற்கு வழி காட்டப் போகிறீர்கள்…?”.//

சரியான கேள்விதான் :)

மங்களூர் சிவா said...

/
இங்கே இருக்கிற இந்தப் போஸ்ட் ஆபிஸுக்கே உங்களுக்கு வழி தெரியவில்லை… நீங்கள் எப்படி எனக்கு சொர்க்கதிற்கு வழி காட்டப் போகிறீர்கள்…?
/

:)))

Post a Comment