டைட்டானிக் கப்பல் மூழ்கி பத்துப் பதினைந்து நிமிடம் இருக்கும்.
ஜேக்கும் ரோஸும் ஒரு வழியாய் தப்பிப் பிழைத்து, ரோஸ் ஒரு கட்டையில் ஏறி அமர்ந்திருக்கும் கடைசி நிமிடம்.
நட்சத்திரங்கள் மின்னும் இரவில், தண்ணீர் இன்னும் உறைந்து, கடல் மீன்கள் இரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.
அங்கும் இங்கும் எங்கும் மனித உடல்கள் மிதந்து கொண்டிருக்கின்றது.
ஜேக் சொன்னான்.
"இந்தப் பயணம் இப்படி, இவ்வளவு சோகமாய் முடியும் என்று நினைக்கவில்லை நான்...!".
ரோஸும் அதை ஒப்புக்கொண்டாள்.
"ஆமாம்... நான் கூட இப்படி முடியும் என்று நினைக்கவில்லை...!".
ஜேக் பரிதாபமாய்ச் சொன்னான்.
"உன்னுடையதைவிட என்னுடைய சோகம் பெரியது ரோஸ்...!".
ரோஸுக்கு குழப்பம்.
ஒரே கப்பலில் பயணித்து, ஒரே மாதிரி மூழ்கி, ஒரே மாதிரிப் பிழைத்திருக்கிறோம். இதில் இவனுக்கு மட்டும் என்ன அதிகமான சோகம்...?
குழப்பத்துடனே ரோஸ் கேட்டாள்.
"எப்படி...?".
ஜேக் இன்னும் பரிதாபமாய்ச் சொன்னான்.
"நான் ரிடர்ன் டிக்கட் வேறு வாங்கி வைத்திருக்கிறேன்...!".
.
.
.
4 comments:
:)))
Ha., Ha., Ha..!
ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாய்ங்க!!
ROFL!! :-D
Post a Comment