Wednesday, January 22, 2014

டேனியின் ஹேர்க்கட்


ஐந்து வயது டேனியை இன்று காலை ஸ்கூலுக்கு ஆயத்தப்படுத்தக் குளிப்பாட்டும் போது நடந்தது இது.

தலைக்கு ஷாம்பூவை அவசர அவசரமாய்ப் போடுகையில் கை விரல்கள் அவன் தலை முடியில் சிக்கிக் கொண்டு வர மறுக்க, கைகளை இழுக்கையில் அவனுக்கு வலியாகி அவன் கத்த... கோபத்துடன் சொன்னேன்.

"மொதல்ல இந்த ஞாயித்துக் கெழம உங்க அப்பாவக் கூட்டிட்டுப் போயி உனக்கு முடி வெட்டச் சொல்லணும்.!".

சொன்னதும் பார்பர் ஷாப்புக்கு போவதே பிடிக்காத டேனி, கோபத்துடன் சொன்னான்.

"போம்மா... சும்மா சும்மா நீ முடி வெட்டச் சொல்லிட்டே இருப்ப.!".

அவன் கோபத்துடன் அழுவதைப் பார்த்ததும், லேசாய் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவனிடம் மேதுவாய்ச் சொன்னேன்.

"பாரு... உனக்குத்தான் சீக்கிரம் சீக்கிரம் முடி வளந்துடுதே.! அதனாலதான முடி வெட்டணும்னு சொல்லறேன்.!".

சொன்னதும் இன்னும் அதிக கோபத்துடன் டேனி சொன்னான்.

"எல்லாம் உன்னாலதாம்மா.. நீ செய்யற வேலைனாலதான முடி வேகவேகமா வளருது.!".

இதென்ன புதுசா சொல்றானே என்ற குழப்பத்துடன் கேட்டேன்.

"உன் தலைல முடி வளர்றதுக்கு நானென்னடா பண்ணா முடியும்.?".

சொன்னதும் இன்னும் கோபமாய் என்னைக் குற்றஞ்சாட்டும் முகத்துடன் டேனி சொன்னான்.

"ஆமா... நீதான் சொல்லச் சொல்லக் கேக்காம குளிக்கும்போது தலைக்கு அதிகமா தண்ணிய ஊத்தறியே. தண்ணிய அதிகமா ஊத்தினா முடி வேகமா வளரத்தான செய்யும்.!".
.
.
.

7 comments:

ராஜி said...

கரெக்ட்தானே!

'பரிவை' சே.குமார் said...

எவ்வளவு சரியாச் சொல்லியிருக்கான்...
வாழ்த்துக்கள்...

Unknown said...

மிகச்சரியான கோபம்தானே ?
குழந்தைகள் தான் பார்கிறார்களே
செடி ,கொடி,மரங்களுக்கு

bandhu said...

எப்படி உங்கள் பதிவுகளை இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்டேன்? அனைத்தும் அருமை! ஒரே மூச்சில் முக்கால் வாசி படித்துவிட்டேன்!

Joseph A said...

மிகவும் அருமை.

Unknown said...

அருமையான கற்பனை வளம்..உம்முடையது..

Unknown said...

GOOD STORIES.

Post a Comment