Saturday, September 7, 2013

அமாவாசை பூஜை


பொதுவாய் அமாவாசை தினங்களில் சாமி கும்பிடுவதுடன் இறந்தவர்களுக்கும் படைப்பது எங்க வீட்டுப் பழக்கம்.

அன்றும் அப்படித்தான்.

சமையலை முடித்து பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்குள் அவரைப் பூக்கடைக்குப் போய் தேவையான பூ மற்றும் மாலைகளை வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

வந்தவர் மாலைகளை சாமி படங்களுக்குப் போட ஆரம்பிக்க, டேனி - தனக்கும் மாலை வேண்டும்... நானும் படங்களுக்கு போடுவேன் -  என்று அவரிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான்.

தொந்தரவு தாங்காமல் டேனியிடமும் மலர்ச் சரங்களைக் கொடுத்து படங்களுக்கு வைக்கச் சொன்னேன்.

அளவாய் நான் வெட்டிக் கொடுக்க முதலில் அவன் கைக்கு எட்டிய சாமி படங்களில் அதை மாலை போல் மாட்டிவிட்டு வந்தான்.

அடுத்துக் கொடுத்த சரத்தை அவருடைய அப்பா படத்துக்கு மாலை போட்டுவிட்டு வந்தவன், அதற்கடுத்ததை அவர் அம்மா படத்துக்கு போடப் போக நான் தடுத்தேன்.

“டேனி… அப்பத்தா படத்துக்கு மாலை போடக்கூடாது.!”.

நான் சொன்னதும் குழப்பத்துடன் திரும்பியவன் கேட்டான்.

“ஏம்மா… அப்பத்தா படத்துக்கு போடக்கூடாது.? தாத்தா படத்துக்கு போட்டோமே.!”.

டேனி கேட்டதும் அவனுக்கு புரியும்படியாய் சொல்ல ஆரம்பித்தேன்.

“ஏன்னா… அப்பத்தா உயிரோட இருக்காங்கதான… அதனால அவங்க படத்துக்கு மாலை போடக்கூடாது. ஆனா… தாத்தா செத்துப் போயிட்டாங்கல்ல… அதனால அவங்க படத்துக்கு மாலை போடலாம்.!”.

சொன்னதும் ஓரளவு புரிந்த பார்வையோடு திரும்பிய டேனி, மறுபடி குழப்பத்தோடு தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“ஏம்மா… இப்ப சாமி படத்துக்கு மாலை போட்டமே… அப்ப சாமியும் செத்துப் போச்சாம்மா.?”.
 .
.
.


3 comments:

Unknown said...

இல்லை டேனி ....
சாமி செத்து போச்சான்னு கேக்க கூடாது...
இறந்தவர்கள் சாமிக்கு சமம்னு நெனைக்கணும்

udhay said...

நாத்திகம் பேச ஆரம்பிச்சுட்டானே டேணி :-)

Unknown said...

அறிவாளி டேனி..உங்களை போல..

Post a Comment